மங்காத செந்தமிழ்
கொண்டுநக் கீரர்க்கு
வந்ததுயர் தீர்த்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. |
(இ-ள்.)
மங்காத
செந்தமிழ்கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த
முருகா! - அழியாத செந்தமிழை (திருமுருகாற்றுப்படையை) ஏற்றுக்கொண்டு
நக்கீரருக்கு நேர்ந்த இடுக்கணைப் போக்கியருளிய முருகனே!, மயிலேறி..........
குமரேசனே!-, வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டன்றி அதிகம்
ஆமோ? - துடைப்பம் வங்காளத்திற்குச் சென்றாலும் ஒருகாசு அளவிற்கன்றி
மிகுதியாக விலைபோகுமோ?, வான் ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி
வண்ணப் பருந்தாகுமோ? - வானத்திலே மிக உயர்ந்த இடத்திலே
பறந்துசென்றாலும் ஊர்க்குருவி அழகிய பருந்தாகுமோ? கங்காசலந்தன்னில்
மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ? - கங்கைநீரிலே
ஆட்டினாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காயாக ஆகுமோ?, கடலுக்குள்
நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால்நாழி தான் -
நாழியென்னும் கருவியைக் கடலிலே முழுக அமுக்கி மொண்டாலும் நான்கு
நாழி நீரைக் கொள்ளுமோ?, ஐங்காதம் ஓடினும் தன்வினைகள் தன்னோடே
அடையாமல் நீங்கிவிடுமோ? - ஐந்துகா தஞ் சென்றாலும் தான்செய்த
வினைகள் தன்னைச்சேராமல் விலகி விடுமோ?, ஆரிடம் சென்றாலும் வெகு
தொலைவு சுற்றிலும் அமைத்தபடி அன்றி வருமோ? - யாரிடத்திலே
அடைந்தாலும் நீண்ட தொலைவு அலைந்தாலும் நமக்கு அமைத்தவாறேயன்றி
வேறு வருமோ?
(விளக்கவுரை)
‘ஐங்காதம்
போனாலும் தன்பாவம் தன்னோடே,?
‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது,' ‘ஆழ அமுக்கி
முகக்கினும் ஆழ்கடல்நீர் - நாழிமுகவாது நால்நாழி' என்பவை இங்குக்
குறிப்பிடத்தக்கவை.
(கருத்து)
ஒருவர்
வினையை ஒருவர் மாற்றமுடியாது. (46)
|