பக்கம் எண் :

79

         47. இறுமாப்பு

சூரபது மன்பலமும் இராவணன் தீரமும்
     துடுக்கான கஞ்சன்வலியும்
துடியான இரணியன் வரப்ரசா தங்களும்
     தொலையாத வாலி திடமும்

பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது
     பராக்ரமும் மதுகைடவர்
பாரிப்பும் மாவலிதன் ஆண்மையும் சோமுகன்
     பங்கில்உறு வல்லமைகளும்

ஏரணவு கீசகன் கனதையும் திரிபுரர்
     எண்ணமும் தக்கன் எழிலும்
இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர்
     இடும்பால் அழிந்த அன்றோ

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த
     வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன் தந்த வரபுத்திர
வடிவேலவா - மன்மதனைக் கண்ணாலே எரித்தருளிய சிவபெருமான் ஈன்ற
சிறந்த மகனே! ‘வடிவேலனே!, மயிலேறி.......... குமரேசனே! -, சூரபத்மன்
பலமும் - சூரபதுமனுடைய உடல்வலிமையும், இராவணன் தீரமும் -
இராவணனுடைய துணிவும், துடுக்கான கஞ்சன் வலியும் - துடுக்கனான
கஞ்சனுடைய ஆற்றலும், துடியான இரணியன் வரப்பிரசா தங்களும் -
படபடப்புடைய இரணியன் வரத்தினாற்பெற்ற ஆற்றலும், தொலையாத வாலி
திடமும் - வாலியின் அழிவற்ற வல்லமையும், பாரமிகு துரியோதனாதி
நூற்றுவரது பராக்கிரமமும் - கூட்டமான துரியோதனன் முதலான நூற்றுவரின்
ஆற்றலும், மதுகைடவர் பாரிப்பும் - மதுகைடவருடைய பெருமையும்,