மாவலிதன் ஆண்மையும்
- மாவலியின் வீரமும், சோமுகன் பங்கில் உறு
வல்லமைகளும் - சோமுகனிடத்திலிருந்த வலிமையும், ஏர் அணவு கீசகன்
கனதையும் - அழகிய கீசகனின் பெருமையும், திரபுரர் எண்ணமும் -
திரிபுரத்தசுரரின் நினைவும், தக்கன் எழிலும் - தக்கனுடைய அழகும்,
இவர்களது சம்பத்தும் - இவர்களுடைய செல்வமும், நின்றவோ -
நிலைபெற்றனவோ?, அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ? -
அவரவர்களின் செருக்கினால் அழிந்தன அல்லவா?
(விளக்கவுரை)
மாரனைக்
கண்ணால் எரித்தது: சிவபெருமான் சனகர்
முதலான இருடிகளுக்கு யோகத்தின் சிறப்பை யோகிலிருந்து காட்டிக்
கொண்டிருந்தார். சூரபதுமனால் துன்புற்ற வானவர்கள் தூண்டுதலினாலே
காமன் தன் மலரம்புகளாலே அவருடைய யோகினைக் கலைக்க முயன்றான்.
அப்போது சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து அவனை எரித்தார்.
பாரிப்பு - பெருமை. கனதை (வட) - பெருமை. இடும்பை - இறுமாப்பு.
(கருத்து)
இறுமாப்புத்
துன்பந் தரும். (47)
48.
நல்லோர்
நட்பு
மாமதியில்
முயலான ததுதேய வுந்தேய்ந்து
வளருமப் போதுவளரும்
வாவிதனில் ஆம்பல்கொட் டிகள தனில் நீர்வற்றில்
வற்றிடும் பெருகிலுயரும்
பூமருவு
புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்
பொங்குகா லந்தழைக்கும்
புண்டரிகம் இரவிபோம் அளவிற் குவிந்திடும்
போது தயம் ஆகில்மலரும்
தேமுடல்
இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்அது
தேறில்உயி ரும்சிறக்கும்
சேர்ந்தோர்க் கிடுக்கணது வந்தாலும் நல்லோர்
சிநேகம்அப் படிஆகுமே
|
|