வாமன சொரூபமத
யானைமுக னுக்கிளைய
வாலகுரு பரவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|
(இ-ள்.)
வாமன
சொரூப மதயானை முகனுக்கு இளையவால குருபர
வேலவா - குறுகிய தோற்றமும் மதயானை முகமுமுடைய கணபதிக்கு
இளைய குமரனே! குருபரனே! வேலவனே!, மயிலேறி.........குமரேசனே! -,
மாமதியில் முயலானது அது தேய்வுழித் தேய்ந்து வளரும் அப்போது
வளரும் - பெருமைமிக்க திங்களிற் காணப்பெறும் கறை, திங்கள்
தேயும்போது தேய்ந்து வளரும்போது வளரும்; வாவிதனில் ஆம்பல்
கொட்டிகள் அதனில் நீர்வற்றில் வற்றிடும் பெருகில் உயரும் -
பொய்கையிலிருக்கும் அல்லியுங் கொட்டியும் பொய்கைநீர் வற்றினால்
வற்றிக்கிடக்கும், நீர் பெருகினால் உயர்ந்து வளரும்; பூமருவு புதல் பூடு
கோடையில் தீய்ந்திடும் பொங்குகாலந் தழைக்கும் - நிலத்திலே பொருந்திய
புதரும் பூண்டும் வெயிற்காலத்திலே தீய்ந்துவிடும் மழையாலே செழிப்புறுங்
காலத்திலே செழித்துநிற்கும்; புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்,
போது உதயமாகில் மலரும் - தாமரை கதிரவன் மறையும் மாலையில்
குவிந்துவிடும்; கதிரவன் தோன்றுங் காலையிலே மலர்ந்துவிடும்; தேம் உடல்
இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும், அது தேறில் உயிரும் சிறக்கும் -
இனிய மெய் வாடினால் உயிரும் சோர்வடையும், மெய் தெளிவடைந்தால்
உயிரும் கிளர்ச்சிபெறும்; சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர்
சிநேகம் அப்படியாகும் - நண்பர்களுக்குத் துன்பம் வந்தாலும் நல்லோர்
நட்பு அவ்வாறே (துன்புறும்போது துன்புற்றும் இன்புறும்போது இன்புற்றும்)
இருக்கும்.
(அருஞ்சொற்கள்)
வாமனம்
(வட) - குறள் வடிவம். முயல் -
களங்கம். வாவி - பொய்கை. பூ - நிலம். புதல் - புதர். புண்டரிகம் (வட)
- தாமரை. போது - பொழுது (கதிரவன்). தேம் - இனிமை; தேன் என்பது
தேம் எனத் திரிந்தது.
|