பக்கம் எண் :

82

     (கருத்து) நல்லோர் நட்பு எப்போதும் மாறாது.           (48)

          49. பயன்தரும்

பருவத்தி லேபெற்ற சேயும் புரட்டாசி
     பாதிசம் பாநடுகையும்
பலமினிய ஆடிதனில் ஆனைவால் போலவே
     பயிர்கொண்டு வருகரும்பும்

கருணையொடு மிக்கநா ணயமுளோர் கையினில்
     கடன்இட்டு வைத்தமுதலும்
காலமது நேரில் தனக்குறுதி யாகமுன்
     கற்றுணர்ந் திடுகல்வியும்

விருதரச ரைக்கண்டு பழகிய சிநேகமும்
     விவேகிகட் குபகாரமும்
வீண் அல்ல இவையெலாம் கைப்பலன் தாகஅபி
     விர்த்தியாய் வருமென்பர்காண்

மருவுலா வியநீப மாலையும் தண் தரள
     மாலையும் புனை மார்பனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மருஉலாவிய நீபமாலையும் தண் தரள மாலையும்
புனைமார்பனே - மணம்பொருந்திய கடப்பமாலையும் குளிர்ந்த
முத்துமாலையும் அணிந்த ‘மார்பனே! மயிலேறி...........குமரேசனே! -,
பருவத்திலே பெற்ற சேயும் - இளமையிலே பெற்ற மகனும், புரட்டாசி
பாதி சம்பா நடுகையும் - புரட்டாசித்திங்கள்பாதிக்குள் நடும் சம்பாவும்,
பலம் இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே பயிர் கொண்டுவரு
கரும்பும் - நன்மைதரும் ஆடித்திங்களில் யானையின் வாலைப்போலக்
குருத்து விரிந்துவரும் கரும்பும், கருணையொடு மிக்க நாணயம் உளோர்
கையினில் கடன் இட்டுவைத்த முதலும் - அருளும் மிகுந்த நல்லொழுக்கமும்