உடையவரிடம் கடனாகக்
கொடுத்துவைத்த முதற்பொருளும், காலமதுநேரில்
தனக்கு உறுதியாகமுன் கற்று உணர்ந்திடு கல்வியும் - துன்பம்
நேர்ந்தகாலத்தில் தனக்கு நன்மை தருவதற்காக இளமையிலேயே
கற்றுத்தெளிந்த கல்வியும், விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும் -
சிறப்புச் சின்னம்மிக்க அரசர்களைப் பார்த்துப் பயின்ற நட்பும், விவேகிகட்கு
உபகாரமும் - அறிஞர்களுக்குச் செய்த நன்றியும், வீண் அல்ல -
வீணாகமாட்டா; இவையெலாம் கைப்பலனது ஆக அபிவிர்த்தியாய் வரும்
என்பர் - இவைகளெல்லாம் கைமேற் பலன் தருவனவாக வளர்ச்சியடையும்
என்பார்கள்.
(விளக்கவுரை)
மரு - மணம்.
தரளம் - முத்து. புரட்டாசி பாதி -
புரட்டாசி பதினைந்து நாட்களுக்குள். விருது - கொடி. குடை முதலிய
அடையாளங்கள். ‘அறுநான்கிலே பெற்ற பிள்ளையும் முன்னாளில் இட்ட
பொருளும் பின்னாளிலே பயன்படும்' என்று பழமொழி கூறுவதுண்டு.
(கருத்து)
இங்குக்
கூறியவை வீண்போகா என்பதாம். (49)
50.
காலத்தில் உதவாதவை
கல்லாது
புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்
கட்டிவைத் திடுகல்வியும்
காலங்க ளுக்குதவவேண்டும்என் றன்னியன்
கையிற் கொடுத்தபொருளும்
இல்லாளை
நீங்கியே பிறர்பாரி சதம்என்
றிருக்கின்ற குடிவாழ்க்கையும்
ஏறுமா றாகவே தேசாந் தரம்போய்
இருக்கின்ற பிள்ளை வாழ்வும்
சொல்லான
தொன்றும்அவர்மனமான தொன்றுமாச்
சொல்லும்வஞ் சகர்நேசமும்
சுகியமாய் உண்டென் றிருப்பதெல் லாம்தருண
துரிதத்தில் உதவா துகாண்
|
|