பக்கம் எண் :

85

         51. திரும்பாதவை

ஆடரவின் வாயினில் அகப்பட்ட தவளையும்
     ஆனைவா யிற்கரும்பும்
அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில்
     அகப்பட்டு மெலிகாக்கையும்

நாடறிய வேதாரை வார்த்துக் கொடுத்ததும்
     நமன் கைக்குள் ஆனஉயிரும்
நலமாக வேஅணை கடந்திட்ட வெள்ளமும்
     நாய்வேட்டை பட்டமுயலும்

தேடியுண் பார்கைக்குள் ஆனபல உடைமையும்
     தீவாதை யானமனையும்
திரள்கொடுங் கோலரசர் கைக்கேறு பொருளும்
     திரும்பிவா ராஎன்பர்காண்

மாடமிசை அன்னக் கொடித்திரள்கொள் சோணாடு
     வாழவந் திடுமுதல்வனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மாடமிசை அன்னக்கொடி திரள்கொள் சோணாடு
வாழவந்திடும் முதல்வனே! - மாடிகளின் மீது அன்னக்கொடிகள் மிகுந்து
காணப்படும் சோழநாடு வாழ வந்த தலைவனே!, மயிலேறி...........குமரேசனே!
-, ஆடரவின் வாயில் அகப்பட்ட தவளையும் - ஆடும் பாம்பின் வாயிலே
சிக்கிய தவளையும், ஆனைவாயில் கரும்பும் - யானையின் வாயிற்பட்ட
கரும்பும், அரிதான கப்பலில் பாய்மரக் காற்றினில் அகப்பட்டு, மெலி
காக்கையும் - அரிய கப்பலிலே பாய்மரத்தின் காற்றிலே சிக்குற்று வருந்தும்
காக்கையும், நாடு அறிய தாரைவார்த்துக் கொடுத்ததும் - உலகம் அறிய
நீர்வார்த்துக் கொடுத்துவிட்ட பொருளும், நமன் கைக்குள் ஆன உயிரும் -
எமன் கையிலே அகப்பட்ட உயிரும், நலமாக அணைகடந்திட்ட வெள்ளமும்
- அழகாக அணையைக்