பக்கம் எண் :

86

கடந்துபோய்விட்ட நீர்ப்பெருக்கும், நாய் வேட்டை பட்டமுயலும் -
நாயின் வேட்டையிலே அதனிடம் அகப்பட்ட முயலும், தேடி உண்பார்
கைக்குள் ஆன பல உடைமையும் - உழைத்துச் சாப்பிடுவார் கையில்
அகப்பட்ட பல பொருள்களும், தீவாதையான மனையும் - நெருப்பினாலே
பற்றப்பட்ட வீடும், திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் -
மிகக் கொடிய ஆட்சியுடைய அரசர்களின் கையில் சென்ற பொருளும்,
திரும்பிவாரா என்பர் - திரும்பிவராதவை என்று கூறுவார்கள்.

     (விளக்கவுரை) கடல் நடுவிலே பாய்மரத்திலே அமர்ந்து விட்ட
காக்கை எங்கே அலைந்தாலும் திரும்பவும் அங்கேயே திரும்பிச்சென்று
தங்க நேரிடும். கரைகாணாத அது வேறே எங்கே செல்லமுடியும்? தேடி
உண்பார் வறியவர்கன். அவர்கள் கைப்பட்ட பொருள்கள் உழைக்க
முடியாதபோது விலையாகி விடும். தேடி உண்பாரைத் திருடரென்று
கூறுவதும் உண்டு. மாடிவீடு - மாடம். சோழநாடு சோணாடு எனத்
திரிந்தது. இவ்வாறு திரிவது மரூஉ எனப்படும்.

     (கருத்து) இங்குக் கூறப்பட்ட பொருள்கள் திரும்பமாட்டா.

          52. நன்று

கடுகடுத் தாயிரம் செய்குவதில் இன்சொலாற்
     களிகொண் டழைத்தல்நன்று
கனவேள்வி ஆயிரம் செய்வதிற் பொய்யுரை
     கருத்தொடு சொலாமைநன்று

வெடுவெடுக் கின்றதோர் அவிவேகி உறவினில்
     வீணரொடு பகைமைநன்று
வெகுமதிக ளாயிரம் செய்வதின் அரைக்காசு
     வேளைகண் டுதவல்நன்று

சடுதியிற் பக்குவம் சொல்லும் கொடைக்கிங்கு
     சற்றும்இலை என்னல்நன்று
சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற
     தாரித்தி ரியநன்றுகாண்