பக்கம் எண் :

87

மடுவினில் கரிஓலம் என்னவந் தருள்செய்த
     மால்மருகன் ஆனமுதல்வா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள் செய்த
மால்மருகன் ஆன முதல்வா - ஒரு மடுவிலே (முதலை வாயில் அகப்பட்ட)
யானை ஓலம் என்று கதற வந்து (முதலையைக் கொன்று) காத்தருளிய
திருமாலின் மருகனான தலைவனே!, மயிலேறி....... குமரேசனே! -, கடுகடுத்து
ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களிகொண்டு அழைத்தல் நன்று -
முகங்கடுத்துப் பல உதவிகள் செய்வதைக் காட்டினும் இனியமொழியாலே
மனமகிழ்வுடன் வரவேற்பது நல்லது; கனவேள்வி ஆயிரம் செய்வதில்
பொய்உரை கருத்தொடு சொலாமை நன்று - பெரிய ஆயிரம் வேள்விகள்
செய்வதினும் பொய்ம்மொழியைக் கருத்துடன் கூறாமை நன்று;
வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் விவேகியோடு பகைமை
நன்று - வெடுவெடு என்று நடந்துகொள்கிற முட்டாளின் நட்பினும்
அறிவாளியொடு பகைத்தல் நல்லது; வெகுமதிகள் ஆயிரம் செய்வதின்
அரைக்காசு வேளைகண்டு உதவல் நன்று - ஆயிரம் பரிசுகள்
கொடுப்பதினும் காலமறிந்து உதவிசெய்தல் நல்லது; சடுதியிற் பக்குவம்
சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று - விரைந்து
நயமாகக் கூறும் (போய்வா என்று கூறுதல்) கொடைத்தன்மைக்கு இப்போது
இங்குச் சிறிதும் இல்லையென்பது நல்லது; சம்பத்துடன் பிணியில்
மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று - செல்வத்துடன் நோயால்
வருந்துவதைவிட நோயில்லாத வறுமையே நல்லது.

     (விளக்கவுரை) களி - மகிழ்ச்சி. கரி - யானை. மால் - திருமால்.
அவிவேகி (வட) - அறிவிலி. விவேகி - அவிவேகி. பக்குவம் சொல்வதால்
அவன் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பலமுறை அங்கு வந்து
ஏமாந்துபோவான்.