பக்கம் எண் :

88

முதலை வாயினின்று யானையைக் காத்த கதை:

     இந்திரத்துய்மன் என்ற அரசன் ஒரு முனிவர் சாபத்தினாலே
யானையாகிக் காட்டில் அலைந்துகொண்டிருந்தான். ஒருநாள் ஒரு மடுவிலே
நீர் பருகும்போது அந்த யானையின் காலை முதலை பிடித்துக்கொண்டது.
அது, ‘ஆதிமூலமே! வந்து காத்தருள்க!' என ஓலமிட்டது. உடனே திருமால்
அங்குத்தோன்றி முதலையைத் தம் சக்கரத்தாலே பிளந்து யானையை
விடுவித்தார். யானைதன் சாபமும் நீங்கியது.

     (கருத்து) இன்சொல், பொய்ம்மை, அறிவிலியோடு கூடாமை வேண்டும்.
இயன்றவரையிற் காலத்திலே உதவுதல்வேண்டும். இரப்போரை ஏமாற்றுதல்
கூடாது. "நோயற்ற வாழ்வே குறைவு அற்ற செல்வம்."                                                      (52)

           53. ஈடாகுமோ?

தாரகைகள் ஒருகோடி வானத் திருக்கினும்
     சந்திரற் கீடாகுமோ
தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலுமொரு
     தம்பட்ட ஓசையாமோ

கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு
     குஞ்சரக் கன்றாகுமோ
கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலுமொரு
     கோகனக மலராகுமோ

பாரமிகு மாமலைகள் பலகூடி னாலுமொரு
     பைம் பொன்மக மேருவாமோ
பலனிலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்
     பனன்ஒருவ னுக்குநிகரோ

வாரணக் கொடியொரு கரத்திற்பிடித் தொன்றில்
     வடிவேல் அணிந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) வாரணக்கொடி ஒரு கரத்திற்பிடித்து ஒன்றில் வடிவேல்
பிடித்த முருகா - ஒரு திருக்கையிற் சேவற்