பக்கம் எண் :

89

கொடியையும் ஒருகையில் வடிவேலையும் பிடித்த முருகனே! மயிலேறி...........
குமரேசனே!-, தாரகைகள் ஒருகோடி வானத்து இருக்கினும் சந்திரர்க்கு
ஈடாகுமோ - ஒரு கோடி விண்மீன்கள் வானத்திலே ஒளிவீசினும் திங்களுக்கு
ஒப்பாகுமோ? தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட
ஓசை ஆமோ - மரத்திற் கட்டிய பல துகிற்கொடிகளின் ஒலிகள் பல
கூடினாலும் ஒரு பறையின் ஒலிக்கு ஈடாகுமோ?, கோரம்மிகு பன்றியின்குட்டி
பல கூடின் ஒரு குஞ்சரக்கன்று ஆகுமோ - அழகற்ற பன்றிக்குட்டிகள் பல
சேர்ந்தாலும் ஒரு யானைக்கன்றுக்குச் சமம் ஆகுமோ?, வாவியில் பல
கொட்டிமலர் கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ - பொய்கையிலே
பல கொட்டிப் பூக்கள் மலர்ந்திருந்தாலும் ஒரு தாமரை மலர்போல்
அழகுறுமோ?, பாரம்மிகு மாமலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன்
மகமேரு ஆமோ - பெருமை மிகுந்த பெரிய மலைகள் பல சேர்ந்தாலும்
ஒப்பற்ற புதிய பொன் மலையான மகமேருவுக்குச் சமமாகுமோ? பலன்
இலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ -
பயன் அற்ற பிள்ளைகள் பலபேர் பிறந்திருந்தாலும் அறிவுடைய ஒரு
மகனுக்கு ஒப்பாவரோ?

     (அருஞ்சொற்கள்) தாரகை - விண்மின். தரு என்பது தாரு என
நீண்டது. தாரு(வட) - மரம். தொனி(வட) - ஒலி. கோரம் (வட) அழகின்மை.
குஞ்சரம் (வட) - யானை. கோகனகம்(வட) - தாமரை. பசுமை - பொன்:
பைம்பொன். பசுமை - புதுமை. வாரணம் - கோழி (சேவல்).

     (கருத்து) அறிவில்லாப் பல பிள்ளைகளினும் அறிவுடைய ஒரு மகனே
மேல்.                                                  (53)

          54. அறியமுடியுமோ

மணமாலை அருமையைப் புனைபவர்க ளேஅறிவர்
     மட்டிக் குரங்கறியுமோ
மக்களுடை அருமையைப் பெற்றவர்க ளேஅறிவர்
     மலடிதான் அறிவதுண்டோ