பக்கம் எண் :

105

தூணொன்றில் ராமரும் மற்றொரு தூணில் வாலியும் வெட்டப்பட்டுள்ளது.
வாலியிடத்து நம் கண்ணை ஒட்டிப்பார்த்தால் ராமர் தெரிவதில்லை.
ராமரிடங் கண் பொருந்தப் பார்த்தால் வாலி தெரிகிறான் என
அதிசயிக்கிறார்கள். தாரமங்கலங் கோயிலே அன்றி திருச்செங்கோட்டிலும்,
(திருநண்ணா) பவானியிலும் பல கட்டளைகளுந் திருவாபரணங்களும்
அர்ச்சகர்களுக்குத் திருமடம் முதலியனவும், வேதாகம பாடசாலை
வைத்துக் கல்வி கற்பித்துக் கொடுத்ததோடு அமையாது, படிப்பை
ஆராய்ந்து தேறியவர்களுக்குப் பரிசு அளித்தும் திருவிழா முதலியன பல
நடத்தியுமிருக்கிறார்கள். வணங்காமுடிக்கட்டி முதலி, சீயாலகட்டிமுதலி,
இம்முடிக்கட்டிமுதலி எனப் பல தலைமுறையினர் தாரமங்கலம் முதலிய
பல இடங்களைக் கட்டி ஆண்டிருக்கிறார்கள், பாண்டியர், நாயக்கர், மைசூர்
அரசர்கள் காலத்து மிகுந்த பராக்கிரமமாக வாழ்ந்திருக்கிறார்கள். வேளாள
வகுப்பினராவர். இவர்கள் திருப்பணியைப் பற்றித் திருச்செங்கோட்டுத்
திருப்பணிமாலை, சேலம், மானியூல் கஜட்டியர், கோயமுத்தூர் மானியூலிலும்
இவர்களது சரித்திரம் பரக்கக் காணலாம். அங்கங்கே
பலகற்சாசனங்களுமிருக்கின்றன.

அன்னத்தியாகி

77.



பன்னப் படாதருந் தப்புன லற்றிடோர் பஞ்சமுற்றுங்
கன்னித் துறைப்பாண் டியன்படைக் கெல்லாங்
களித்தமுதிட் டன்னத்தியாகி யெனவச் செழிய னழைக்க வுயர்
வன்னப் பரிவேன் முளசையுஞ் சூழ்கொங்கு மண்டலமே.

     (க-ரை) உண்ணுதற்குத் தண்ணீரு மகப்படாத பஞ்சகாலத்திற்
பாண்டியன் சேனைக்கு அமுதூட்டி அன்னத்தியாகி என்று புகழ்ப்
பெயர்பெற்ற வேலன் என்பவனது முளசை நகருங் கொங்கு மண்டலம்
என்பதாம்.

     வரலாறு :- பாண்டி நாட்டிற் கொடும் பஞ்சம் பரவிய காலத்தில்
அப்பொழுதுள்ள பாண்டிய ராசன் தன் சேனைகளின் ஒரு பகுதியை
முளசை வேலப்பனிடம் அனுப்பினான். பஞ்சம் நீங்கும் வரையில்
அப்படைக்கு அன்ன முதலியன உதவி நற்காலம் பிறந்தபின் சேனையை
அனுப்புமாறு அரச நிருபம் வரும்வரையில் மகிழ்ச்சிகூறக் காப்பாற்றினன்.
இவ்வித அரிய பெரிய குணத்தை நன்கு மதித்து அன்னத்தியாகி என்ற
பட்டங்கொடுத்தனன்.