பக்கம் எண் :

107

                      (மேற்)

பன்னுந் தமிழ்க்கவன் மாமனை யாதி பரிசளிப்ப
முன்னம்பி காளிக்கு நெற்குன்ற வாண முதலியென்போன்
பின்னுஞ் சிலபல பொன்னுங் கொடுத்துத்தன் பேர்நிறுத்த
மன்னுந் தமிழு முரைத்தா னவன்றொண்டை மண்டலமே...

கற்குங் கவிவல்லை யாதவர்கோ னம்பி காளிக்கியாம்
விற்கும் பரிசன மாகிவிட் டோம்வட வேங்கடமும்
பொற்குன்ற மும்புகழ் கங்கா நதியும் பொதியமும்போ
னெற்குன் றமுநம் மரபுமெந் நாளு நிலைநிற்கவே.

(நாவலர்சரிதை)

     பின்பு யாதவர் கோனான நம்பி காளி என்னுஞ் செந்தமிழ்ப் புலவர்
தேசசஞ்சாரஞ் செய்துவரும்பொழுது கொங்குமண்டலத்தே நெருவூர் என்னும்
நகரத்தைச் சேர்ந்தனர். கையேட்டுக் காரர்களால் இப்புலவரின் வாக்கு
வல்லமையைக் கேட்ட விப்பிரர்கள் அழுக்காறு கொண்டு இந்நாவலரையுந்
தமிழையு மிகழ்ச்சி கூறினார்கள். மாணாக்கர் மறுத்தெதிர் கூறினர். தமிழுந்
தமிழ்ப் பாக்களுந் தெய்வ அருள் நிரம்பியதென்பது உண்மையாயின்
பட்டுப்போன இந்த மரத்தைத் தழையும்படி பாடுவரோ? என்றார்கள்
தெய்வத்தமிழ் என்னும் சொல்லை நிலையாக்குங்களென்று மாணாக்கர்
வேண்டுதலும் ஒரு வெண்பாக் கூறினர். பசுமையாய்த் தளிர்விட்டது என்பர்.

                      (மேற்)

தெய்வத் தமிழென்னுஞ் செம்மொழியு மம்மொழிநேர்
செய்விப்பர் தேவரெனல் தேறத் - தெய்வஞ்
சுரந்தளிக்கு மாநெருவூர்ச் சோலையிலே பட்ட
மரந்தளிர்க்க வின்று வளர்ந்து.

                அல்லாளன் இளையான்

79.வடமுக நின்று வருகா விரியின் வனத்தை யென்றுந்
திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த
அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைத்துவளர்
வடகரை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே.

     (க-ரை) வடதிசையினின்று வந்த காவிரி நீரைக் கொங்கு நாட்டினும்
பாசனமாகும்படி வாய்க்காலாகப் பிரித்த வல்லாள இளையான் வாழ்கின்ற
வடகரை ஆற்றூருங் கொங்கு மண்டலம் என்பதாம்.