பக்கம் எண் :

145

"ஆகெழு கொங்கர் நாடகப்படுத்த
 வேல்கெழுதானை"
                     - பதிற்றுப்பத்து 22

"கொங்கர் செங்களம் வேட்டு"               - சிலப்பதிகாரம்

"கொங்கில் குறும்பில் குரக்குத்தளியாய்"      - சுந்தரர்தேவாரம்
                                              ஊர்த்தொகை

"குரவலர் சோலையணிதிருப் பாண்டிக்
 கொடுமுடி யணைந்தனர் கொங்கில்"  
      - பெரியபுராணம்.

மலைகளும் ஆறுகளும்

     ஆனைமலை, வெள்ளிமலை, சேர்வராயன்மலை, கொல்லிமலை
போன்ற வளமிகுந்த பெரியமலைகளும் சென்னிமலை, சிவன்மலை,
பழனிமலை, ஐவர்மலை, வெண்ணைமலை, தலைமலை,
திருச்செங்கோட்டுமலை, கஞ்சமலை, பொன்னூதிமலை போன்ற
தெய்வத்திருமலைகளும் இந்நாட்டில் சிறந்து விளங்குகின்றன.

     காவிரியாறு, குடகுமலையின் தோன்றிக் கொங்கு நாட்டின் வழியாகச்
சோணாடு செல்கின்றது. சேர்வராயன் மலையில் சரபங்க நதியும்,
கஞ்சமலையில் பொன்னியாறும், மேற்குமலைத் தொடரில் வானியாறும்,
வெள்ளிமலையில் நொய்யலாறும் (காஞ்சி), கொல்லி மலையில் ஐயாறும்,
ஆனைமலையில் பொருனை யென்னும் ஆம்பிராவதியும் தோன்றிக் காவிரி
நீரோடு கலந்துசென்று சோழ நாட்டைச் செழிக்கச் செய்கின்றன.

தலங்கள்

     கொங்கு நாட்டில் பல தெய்வத் தலங்கள் உள்ளன. அவற்றுள்
தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் ஏழு. அவை கருவூர் வெஞ்சமாக் கூடல்,
கொடுமுடி, பவாநி, அவிநாசி, முருகன்பூண்டி, திருச்செங்கோடு என்பனவாம்.

     மொக்கணீசுரமும், அவிநாசியும் திருவாசக வைப்புத் தலங்களாகத்
கொள்ளத்தக்கன.

மக்கள்

     கொங்கு நாட்டில் நிலமக்களும், குலமக்களும், குடிமக்களும்,
வினைமக்களுமாகப் பலவகை மக்கள் வாழ்கின்றனர்.

ஆட்சியாளர்கள்

     சங்க காலத்தில் கொங்கு நாட்டைக் கோசர்களும், இருங்கோவேள்
முதலிய வேளிர் மரபினரும் ஆட்சிபுரிந்தனர். அக்காலத்தில்