பக்கம் எண் :

147

சமயநிலை

கொங்கு நாட்டில் சைவமும், வைணவமும், சைனமும் தொன்மை
தொடங்கியிருந்த சமயங்களாம். சைனம் சீர்குலைந்தது எனினும் இந்நாட்டில்
விசயமங்கலம், சீனாபுரம், திங்களூர், பூந்துறை, வெள்ளோடு முதலியவற்றில்
உள்ள பழமையான சைனக் கோவில்கள் போற்றத் தக்கனவாகவுள்ளன.

நாட்டுச்சிறப்பு

     கொங்குநாடு தொன்மை தொடங்கி உழவிலும், பசுக் காத்தலிலும்
பேர்பெற்ற நாடு. ஆசிரியர் நச்சினார்க்கினியர் தமது தொல்காப்பிய
வுரையில் மென்றொடர்க் குற்றியலுகரம் அத்துச்சாரியை பெறுவதற்குக்
கொங்கத்துழவு" என்று உதாரணங் கூறியிருப்பதும் பதிற்றுப்பத்தில்
"ஆகெழு கொங்கர்நாடு (22)" என வருவதும் அகநானூற்றில் (79)

".... .... .... .... .... .... .... .... .... கொங்கர்
 படுமணியரயம் நீர்க்குநிமிர்ந்து செல்லும்
 சேதாவெடுத்த செந்நிலக் குருஊத்துகள்
 அகலிரு விசும்பின் ஊன்றித் தோன்றும்
 நனந்தலை அழுவம்"

என வருவதும் கொங்கு நாட்டில் உள்ள உழவின் மிகுதியையும் பசுவின்
மிகுதியையும் உணர்த்துவனவாம்.

     இனிக் கொங்குமண்டல சதகம் பற்றிச் சிறிது கூறுவாம்.

கொங்குமண்டல சதகம்

     கொங்கு மண்டலத்தைப் பற்றிப் பாடிய சதகம் கொங்கு
மண்டல சதகமாம். சதகம் என்பது நூறு செய்யுட்களாற் பாடுவது,
"விளையுமொருபொருண் மேலொருநூறு, தழையவுரைத்தல் சதகமென்ப"
என்பது இலக்கண விளக்கப்பாட்டியல் - 86.

     சதகம் பல பொருள் பற்றிப் பாடப்பெறும். இது வரலாறு பற்றிப்
பாடப்பெறும் சதகவகையைச் சார்ந்தது. இந்நூலின்கண் வரும் முதல்
மூன்று பாடல்களும் பாயிரமாகவமைந்த ஆசிரிய விருத்தங்கள்,
நூலுக்குரியனவாகப் பாடப்பெற்ற பாடல்கள் நூற்றொன்றும் கட்டளைக்
கலித்துறைகள்.

நூலாசிரியர்

     "வடித்தமிழ் நூலையாசான் வாலசுந்தரம் யான் சொன்னேன்" எனப்
பாயிரம் கூறுவதால் இந்நூலாசிரியரின் பெயர் வாலசுந்தரக்