பக்கம் எண் :

148

கவிஞர் எனத் தெரிகின்றது. "இம்முடிவாரணவாசியெங்கள் வடமலை
முன்னவன்" என விசயமங்கலத்தில் வாழ்ந்த வாரணவாசி முதலியோரை
'எங்கள்' என உரிமை பாராட்டிக் கூறுதலின் இந்நூலாசிரியர் குறும்பு
நாட்டு விசயமங்கலத்தைச் சார்ந்தவரெனத் தெரிகிறது.

     நூன் முகப்பில் விநாயகர் காப்புக் கூறுதலின் ஆசிரியர் சைவ
சமயத்தினரென்பது துணிபு. ஆசிரியர் வெண்ணைநல்லூர்ச் சடையன்
வாழ்ந்த காலமாகிய கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நூல் செய்வித்தோன்

  " பொருட் சாத்தந்தைப் பண்ணைகோன் வெண்ணைநல்லூர்
    கொடுத்திடு முரணம்வாரிக் கொங்குசெய் சதகந்தானே
"

எனப் பாயிரம் கூறுதலின், இந்நூல் செய்வித்தோன் வெண்ணைநல்லூரில்
வாழ்ந்த சாத்தந்தை கோத்திரத்தானாகிய பண்ணைகுல வேளாளத்
தலைவன் எனத்தெரிகிறது. அவனையே இந்நூலின் மற்றோரிடத்தில்
"சாத்தந்தை கோத்திரன் பண்ணை குலேந்திரன் தமிழ்ச் சடையன்,"
எனக் கூறுவதால் இந்நூல் செய்வித்தோன் வெண்ணைநல்லூர்ச் சடையன்
கொங்கு வேளாள குலத்தினன் என்பது நன்கு விளங்கும். அவ்வுரிமை
பற்றியே பெரும் பொருள் கொடுத்துக் கொங்கு மண்டல சதகம்
செய்வித்தான் என்பது துணிபு.

     இந்நூலின் மற்றோரிடத்தில் "பண்ணை குலாதிபன் கம்பர்
செய்ராமர் பனுவலதை" எனக்கூறுவதால் கம்பரைக் கொண்டு
இராமாவதாரம் செய்வித்த சடையனும் இவனே என்பது தெளிவாகிறது.

     கொங்கர் குலத்தில் தோன்றி, நடுநாட்டிலுள்ள வக்கபாகை
யென்னுமூரில் வாழ்ந்து வில்லிபுத்தூராழ்வாரைக் கொண்டு பாரதம்
பாடுவித்த வரபதியாட் கொண்டானைப் போலக் கொங்கு வேளாள
குலத்தினனாகிய சடையன், நடுநாட்டிலுள்ள வெண்ணைநல்லூரில்
வாழ்ந்து கம்பரையாதரித்து இராமாவதாரம் பாடுவித்தான் எனத்
தெரிகிறது.

     வேளாளர்கள் திருமாலின் அமிசமானவர்கள் என்பது
நூன்மரபாதலானும், சடையன் திருமாலின் பெயராகிய கண்ணன்
என்னும் இளமைப் பெயரையும் சரராமன் என்னும் விருதுப் பெயரையும்