பக்கம் எண் :

156

     (கு-ரை) தேவர் கற்றவர் - திருக்குறளைப் படித்தவர்கள். தேவர்
- கருத்தாவாகுபெயர். தேவர் கவிக்கடல் - பெருந்தேவனார் செய்த
கவிசாகரமென்னும் யாப்பிலக்கணநூல்; சிந்து - கடல்.

                நூல் வரலாறு

3.இடுக்குவர் பிள்ளை தன்னை யிறங்கினும்
     இறக்கார் என்று
வடித்தமிழ் நூலின் ஆசான் வாலசுந்
     தரன்யான் சொன்னேன்
படிக்கவே பொருட்சாத் தந்தைப் பண்ணைகோன்
     வெண்ணை நல்லூர்
கொடுத்திடும் இரணம் வாரிக் கொங்குசெய்
     சதகந் தானே.

     (கு - ரை) சாத்தந்தை - சாத்தந்தை கூட்டம், பண்ணைகோன் -
பண்ணைகுலத்தவன், குலம் - சாதிப் பிரிவுகளின் தனித்தனிக் கூட்டம்.
பண்ணைகுலம், பாலைகுலம் போல்வன குலப்பெயர்கள், பண்ணந்தை
சாத்தந்தை போல்வன மரபுப்பெயர். 'சாத்தந்தை கோத்திரன் பண்ணை
குபேந்திரன் தமிழ்ச்சடையன்' என இந்நூலின் பின்னர்க் கூறுவது காண்க.

                     நூல்

              (கட்டளைக் கலித்துறை)

                    தலங்கள்

1.செஞ்சொற் கறைசை திருவானி கூடல் திருமுருகர்
கஞ்சத் தென் புக்கொளி பேரூரறசை கமலர்பட்டி
வெஞ்சனற் கூடலும் நாககிரிவரு வெண்ணைமலை
வஞ்சியில் ஈசன் இருப்பதன் றோகொங்கு மண்டலமே

     (கு - ரை) கார்மேகக்கவிஞர் கொங்குமண்டல சதகம். பாடல் 4 -
ஒப்பு நோக்கத்தக்கது.

                    மலைகள்

2.கொல்லியும் வைய மலைவா யிடபங் குடககிரி
வில்லியும் ராமர் வராக மெனுங்கிரி வேலர்கிரி
அல்லியும் நீல கிரிமேவும் வெள்ளி யரவகிரி
வல்லியும் வெண்ணை மலைசூழ்வதாங் கொங்குமண்டலமே

     (கு - ரை) கார்மேகக்கவிஞர் சதகம் பாடல் - 6 - ஒப்பு