பக்கம் எண் :

158

     வரலாறு : முன்பொரு காலத்தில் சின்ன நல்லாள், பெரிய
நல்லாள் என்னும் கணிகையர்குலக் கன்னியர் இருவர் ஈரோட்டில் உள்ள
தொண்டீசுவரரை வழிபட்டுக் கொண்டு இந்திரனை மணக்க வேண்டித்
தவம் செய்தனர். அவர்கள் ஒருநாள் தொண்டீசரை வழிபட்டுக்கொண்டு
தம் இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அக்காலத்தில் ஈரோட்டில்
வாழ்ந்த பொருநற்கிள்ளி என்னும் சோழ வேந்தன் அம்மகளிரை
எதிர்ப்பட்டுக் கணிகை மாதராகிய நீங்கள் ஏன் ஆடவர் தரும்
பொருளைப் பெற்று அவர்களைக் கூடுவதில்லை என்றனன். அவர்கள்
தேவேந்திரனையன்றி வேறு ஆடவர் யாவரையும் யாம் புணரோம்
என்றனர். அது கேட்ட சோழ மன்னன் நீவிர் இந்திரனை மணக்கும்
கற்புடையவராயின் இந்திரனைக் கொண்டு பொன்மாரி பூமாரி பொழியச்
செய்ய வேண்டும் என்றனன். அம்மாதரும் அதற்கிசைந்து தம் இல்லம்
சென்றனர். அன்றிரவே தேவேந்திரன் வந்து அம்மகளிரை கூடி மகிழ்ந்து
அவர் வேண்டியபடியே பொன்மாரி பூமாரி பொழியச் செய்தனன். அதனால்
அந்நாட்டிற்குப் பூந்துறை நாடென்று பெயராயிற்று - என்பது சென்னிமலைத்
தல புராணம் புட்பகிரிச் சருக்கம்.

'பொன்னின் மாமழை பெய்து மாதவர் இருவர்க்காய்ப்
 புரந்தரன் பரவுநாடு' - நாட்டுப் பாடல்.

'தேமாரி நிகழ்வானஞ் செறிபாரி சாதமலர்
 பூமாரி பொன்மாரி பொழிமூதூர் பூந்துறையூர்'

(சென்னிமலைத் தல புராணம் - செப்பேடு கண்ட
மான்மியம் - 23)

             குமரியருச்சித்தது - மோகனூர்

6.நந்தூர் நெடுவயல்சூழ முகவை நகர் தனிலே
இந்தூர் சடையான் நசையால் விளக்கம்ஒன்று ஏற்றுதற்கு
சந்தோச மாய்ஒரு பாவனைகொண்டு தயிருவிற்க
வந்தோர் குமரி யருச்சித் ததும்கொங்கு மண்டலமே.

     (கு - ரை) முகவை - முகவனூர். இது மோகனூர் என
வழங்குகின்றது. நாமக்கல் வட்டத்தில் உள்ளது. நசை - விருப்பம், குமரி
- குமரிப்பெண்.

     வரலாறு : முன்பொரு காலத்தில் குமரிபாளையம் என்னும்
ஊரில் தேனாயி என்னும் பெயருடைய குமரியொருத்தியிருந்தாள். அவள்
அவ்வூரிலுள்ள மணியகுலத்து வேளாளன் ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டாள்.
அவள் தினமும் வெளியூர் சென்று தயிர் விற்று வருவது