தவத்தில்
தலைமை பெற்ற நாரத முனிவர் நாள்தோறும் வேள்வி
செய்தபோது வேள்வியில் சாம்பலைக் கொட்டியதால் மலையாய் வளர்ந்தது
என்ற இவ்வரலாறு தலபுராணத்தில் கூறப்படாதது.
சோழனை
யானை வந்து கொண்டுபோனது
11.
|
இதமுறுகீர்த்திபெறுமாறு
நாட்டன்று செம்பியர்கோன்
நிதமுடன் வந்து பிறந்த அந்நாள் எதிர் பட்டத்துக்கு
துதிபுகழ் கொண்ட கரிகால சோழனைத் துங்கவெற்றி
மதகரி வந்துகொடு போனதும் கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) இதமுறுகீர்த்தி - நன்மைமிக்க புகழ். செம்பியர்
கோன் - சோழமன்னன். உறையூர்ச்சோழன் ஒழுக்கம் தவறி நடந்ததனால்
மண்மாரிபெய்து நாடு முழுதும் அழிந்தது. சோழனும் மடிந்தான். அவன்
தேவிமார்களான சிங்களாம்பாள் சியாமளார்பாள் என்ற இருவரும் கொங்கு
நாட்டிற்கு வந்து தங்கினர். பிராமணச் சேரியில் சிங்களாம்பாள் ஒரு
பிள்ளையைப் பெற்றார். சோழ நாட்டில் மன்னன் இன்மையால் கவலையுற்ற
அமைச்சர் முதலியோம் யானையை ஏவ அது சிங்களாம்பாள் இருந்த
சேரிக்கு வந்து பிள்ளையை எடுத்துச் சென்றது. அப்பிள்ளைக்கு கரிகாலன்
எனப்பெயரிட்டு முடி சூட்டினார்கள். இவ் வரலாறு சோழன் பூர்வ
பட்டயத்தில் விரிவாகக் கூறப்பட்டு உள்ளது. கார்மேகக் கவிஞர் பா
33சதகத்திலும் இச்செய்தி சற்றுமாற்றிக் குறிப்பிடப்பெற்றுள்ளது.
லிங்கம்
கொடுத்தது - அவிநாசி
12.
|
தரிக்கப்
புகழ்அவி நாசியில் வாழும் தவம் உடையான்
நெருக்கும் அரண்மனை யார்புரி வாதையுள் வாவிக்குள்ளே
திருத்து சிவலிங்கம் தன்னை எறிந்து உயிர் சீவிக்குமுன்
வரிக்கை யிலிங்கம் கொடுத்ததுவும் கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) அவிநாசியில் முன்பு குருநாத பண்டாரம் என்ற
வீரசைவன் ஒருவன் இலிங்க தாரியாய் இருந்தான். அவன்
குளக்கரையிலிருந்து சிவலிங்க பூசை செய்து கொண்டிருந்தபோது
குளம் உடைப்பு எடுத்தது. அதனைக் கண்ட ஆள்திரட்டும் அரண்மனை
|