பக்கம் எண் :

173

     மல்லரை வீமன் செயித்தது, கீசகன் வதை முதலியவற்றைப் பாரதம்
நோக்கியறிந்து கொள்க.

                      கீசகன் கதை

(33)



விண்ணவர் போற்றிய லாட புரத்தைவர் வேற்றுருவாய்க்
கண்ணிய வேடங்கொண் டங்கே யிருக்கின்ற காலத்திலே
கிண்ண முலையைத் தழுவவென் றேவந்த கீசகனை
வண்ண மகள்செகுத் தாளது வுங்கொங்கு மண்டலமே.

             வீமன் மல்லரைத் தொங்கச் செய்தது

(34)



அவ்வா னவர்பணி வீமன் விலாட புரமதனில்
ஒவ்வாக் கொடுந்துரி யோதனன் விட்ட வுயர்மல்லரைச்
செவ்வால் மரத்தை வளைத்தினை கொய்யெனச் சொல்லிவிட்டு
வவ்வா லெனத்தொங்கச் செய்தது வுங்கொங்கு மண்டலமே.

          அறுந்தகனி பொருந்தினது - புகழூர் மலை

(35)



நாவலந்தீவிற் றுரியோ தனனைவர் நாடுவிட்டுப்
பூவனந் தன்னில் வந்துதித் தோர்புக ழார்ந்தமலை
தேவதி தேவன் றிரோபதை காந்தன் சிவனமுத
மாவின் கனியைப் பொருந்தவும் வாழ்கொங்கு மண்டலமே

                      காந்த மலை

(36)



சொற்றிறம் பாமற் றுரோபதை யைவருந் துய்யவன
முற்றது சொல்லவு மற்றது தான்பொருந்து துங்கனியைச்
சித்திர காந்த முனியீசர் பூசை சிறந்தகனி
வைத்தனன் காந்த மலையோங்கி வாழ்கொங்கு
மண்டலமே.