பக்கம் எண் :

207

                     விநாயகன் துணை

               கொங்கு மண்டல ஊர்த்தொகை

                         காப்பு

                      விருத்தம்

* பொங்கு மண்டல மாசுண பூடணற் பரசி
  இங்கு மண்டல மொழிகளு ளிறையரு டமிழ்மான்
  றங்கு மண்டல 1மேழினுட் டாழ்வறு வளஞ்சேர்
  கொங்கு மண்டல வூர்த்தொகை குணமுறக் குறிப்பாம்.

                      நூன்முறை

தண்டமிழாய் பவர்பதிக டரிசிப்போர் தொன்மைச்
     சரிதமுறை விவகரிப்போர் தடுமாற்றுறாது
மண்டலத்து ளிருபத்து நான்குநாடவற்றை
     மருவுபநா டொவ்வொன்றின் மன்னியபே ரூரைப்
பண்டரசர் செப்பேடு கல்லெழுத்துத் தமிழ்நூல்
     பலவாய்ந்து பிழைபோக்கு பழங்கவியு மதுகொள்
வண்டெனயா னிசைகவியுந் தொகுத்ததனைக் கொங்கு
     மண்டலவூர்த் தொகையெனப்பேர் வழங்க விளக்கினனே.

            கொங்கு இருபத்துநான்கு நாடுகள்
     
              ஆசிரிய விருத்தம்

1.சொல்லவரி தானபூந் துறைசை தென்கரைநாடு தோன்று
                                 காங்கேயநாடு
     தோலாத பொன்கலூர் நாடுதிக ழாறையளி
                           தோய்ந்தவா ரக்கநாடு
வல்லமை செறிந்ததிரு வாவினன் குடிநாடு மணநாடு
                                   தலையனாடு
     வரதட்டை பூவாணி யரையனா டொடுவங்க வடகரை
                                    கிழங்குநாடு


   * முதலில் இக்குறியிட்ட பாடல்களெல்லாம் உரையாசிரியர் தி.அ.
     முத்துசாமிக் கோனாரால் இயற்றிச் சேர்க்கப்பட்டன.
   1 சோழமண்டலம் - ஜயங்கொண்ட சோழமண்டலம் - ராஜ
     ராஜ மண்டலம் - சோழகேரள மண்டலம் (வீரசோழ மண்டலம்) -
     கங்கைகொண்ட சோழ மண்டலம் - நிகரிலி சோழமண்டலம் -
     ஈழமண்டலம் என ஏழு.