பக்கம் எண் :

208

நல்லுருக் கன்னாடு வாழவந் தியுமண்ட நாடுவெங் காலநாடு
     நாவலர்கள் சொல்கா வடிக்காநா டானைமலை
                                 ராசிபுர நாடுநிதமும்
இல்லறம் வளர்த்துதவி மல்குகாஞ் சிக்கோயி லியல்செறி
                                       குறுப்புநாடு
     மினியபுகழ் சேர்கொங்கு மண்டலந் தனிலான இருபத்து
                                      நான்குநாடே.

பூந்துறை நாடு தலையனாடு வாழவந்திநாடு
தென்கரை நாடு தட்டயனாடு அண்டநாடு
காங்கேய நாடு பூவாணியனாடு வெங்காலநாடு
பொன்கலூர் நாடு அரையனாடு காவடிக்கனாடு
ஆறைநாடு ஒடுவங்கநாடு ஆனைமலநாடு
வாரக்கனாடு வடகரைநாடு ராசிபுரநாடு
திருவாவினன்குடிநாடு கிழங்குநாடு காஞ்சிக்கோயினாடு
மணநாடு நல்லுருக்கனாடு குறும்புனாடு.

                                                                                                             ஆக நாடுகள் - 24

          பூந்துறை நாட்டில் மேல்கரைப் பூந்துறை நாடு

2.















பூந்துறைசை வெள்ளோடை நசியனூ ரெழுமாதை
                          புகழ்சேர்பி பாரிநகரம்
     பூங்கமழு மீங்கியூர்பெ ருந்துறை சாத்தனூர்
                          பொன்காள மங்கலமதும்
ஆய்ந்ததமிழ் கூறுங் குழாநிலை கிழாம்பாடி யாண்மை
                             கொண்மு டக்குறிச்சி
     யநுமரகர் பழமங்கை குளவிளக் குக்காக மறச்சலூர்
                                 விளக்கேத்தியும்
வேந்தர்மகி ழீஞ்சநகர் சத்திமங் கலமதும் மிக்கசே
                                    மூர்மங்கலம்
     வீரநக ரீரோடு பேரோடு சித்தோடு மிக்கான
                                    திண்டற்புதூர்
சேர்ந்துமழை பேய்ந்தருளு மிலவமலை திருவாச்சி
                          திகழ்பனசை யோடாநிலை
     தென்முருங் கைத்தொழுவு முப்பத்தி ரண்டூர்சி
                           றந்தபூந் துறைசை நாடே.