பக்கம் எண் :

210

     இந்த ஊர்கள் சூழ்ந்த மலைக்கோட்டையுள்ள கடிஸ்தலம்
சங்ககிரி துர்க்கம். இதில் பிரதி காவலரிருந்து அதிகாரம் புரிவர்.
குன்றத்தூர்க் கூற்றம் என்று பெயர். இக்கூற்றத்தைச் சார்ந்த நாடுகள் 12.
இம்மண்டலத்துப் பொதுவான தேவநாமம் திருச்செங்கோடு. ஆதலின்
இவ்விரு நகரங்களும் ஊர்த்தொகையுட் சேரவில்லை.

          பூந்துறை நாட்டின் இணைநாடுகள் - 2.

                   1. பருத்திப்பள்ளி

4.















சீர்பருத் திப்பள்ளி மல்லை கோட்டைப்பதி
                     திகழ்கருங் கற்பட்டியுந்
     திறமிகுங் கொண்ணையா றவிநாசிபட்டியுஞ்
                     செய்மேவு பண்டிநத்தம்
ஏர்கொழுங் கொண்டைகூத் தாநத்தம் வைகுந்த
                    மிசைகரும னூர்தாழையூர்
     ஏகாபுரம் புள்ளா நகர்நடுவ னேரியுட னேற்றகன்
                               னந்தேரியும்
பேர்கொள்தப் பக்குட்டை கூடலூர் மங்கலம்
                      பேசிடங் கணசாலையும்
     பேணு கச்சுப்பள்ளி யிரணா புரங்கனகை
                  மெய்சண்பை பாலைமுஞ்சை
பார்கொள் பல்லக்குழி கண்டமாணிக்கமும்
                     பகராட்டையாம் பட்டியும்
     பழுதில்மாம் பூண்டிமின் னாம்பளி மரப்பறை
                       பருத்திநன் னாடுதானே.

பருத்திப்பள்ளி வைகுந்தம் இரணாபுரம்
ராஜசிம்ம சதுர்வேதி கருமனூர் கனககிரி
மங்கலம் - சித்திரமேழி தாழையூர் சண்பகமாதேவி
விண்ணகரம் ஏகாபுரம் பாலமேடு
மல்ல சமுத்திரம் புள்ளாநத்தம் முஞ்சனூர்
கோட்டைப்பாளையம் நடுவனேரி பல்லக்குழி
கருங்கல்பட்டி கன்னந்தேரி கண்டகுள
கொண்ணையாறு தப்பக்குட்டை மாணிக்கம்
அவிநாசிபட்டி கூடலூர் ஆட்டையாம்பட்டி
பண்டிநத்தம் மங்கலம் மாம்பூண்டி
கொழுங்கொண்டை இடங்கணசாலை மின்னாம்பள்ளி
கூத்தாநத்தம் கச்சுப்பள்ளி மரப்பறை

ஆக ஊர்கள் - 32