பக்கம் எண் :

212

                 தென்கரை நாடு

                    விருத்தம்

6.







கோதிலாக் கொற்றனூர் மூலனூருங்
     குறிச்சியிளம் பிள்ளைவீ ராச்சியோடு
ஏதிலா ரும்புகழுந் தூரம்பாடி
     யெதிரனூர் பிரமியமும் நீலம்பூரும்
ஊதியூ ருடன்கொழுமண் குழிகிழானா
     ருயர்குண்ட லுடன்பன்னிரண்டூர் சேர்ந்து
நீதிசேர் தென்கரைநா டாகுமென்றார்
     நிரம்புகல்வி கற்றபெரும் புலவர்தாமே.

கொற்றனூர் வீராச்சிமங்கலம் நீலம்பூர்
மூலனூர் தூரம்பாடி ஊதியூர்
குறிச்சி எதிரனூர் கொழுமண்குழி
இளம்பிள்ளை மாம்பாடி கிழான்குண்டல்
   முளையான் பிரமியம்  
   பூண்டி    

                                                                                                         - ஆக ஊர்கள் - 12

     இந்த ஊர்கள் சூழ்ந்துள்ள தாராபுரம் நிலக் கோட்டையுள்ள
கடிஸ்தலம். ஒரு அரசப் பிரதிநிதி இருந்து அதிகாரஞ் செலுத்துவது.
இக்கூற்றத்தைச் சார்ந்த நாடுகள் 24. ஆதலின் கிராமத்தில் தாராபுரஞ்
சேர்த்து எண்ணப்படவில்லை.

     தாராபுரம் பழனி முதலிய சில ஊர்களைச் சேர்த்து நறையூர் நாடு
என்று வழங்கினதும் உண்டு.

                   காங்கேய நாடு

7.







காங்கயத்துடன் வல்லிதன் காடையூர் கந்தர் மேவிய
                                பட்டாலிகீரனூர்
     ஓங்கு பார்ப்பதி நற்பரஞ் சேர்வளி யுற்றகாரை                           மருதுறை வெண்முத்தூர்
தேங்குகன்ன புரம்வெள்ளை கோவிலுஞ் சிறந்தவாறு
                          தொழுவாலாம் பாடியும்
     தீங்கிலாத கங்காகுல நாட்டார் செழிக்குங்
                      காங்கேய நாடெங்கள் நாடே.