பக்கம் எண் :

213

காங்கேயம் பார்ப்பதி முத்தூர்
வல்லியிறைச்சல் பரஞ்சேர்வளி கன்னபுரம்
காடையூர் காரையூர் வெள்ளைகோவில்
பட்டாலி திருபுவனமாதேவிபுரம் ஆறுதொழு
கீரனூர் மருதுறை ஆலாம்பாடி

                                            ஆக ஊர்கள் - 14

     சிவமலை இந்நாட்டின் பொதுத்தலமெனக் கொண்டு கிராம
ஊர்த்தொகையிற் சேர்க்கவில்லை.

                   பொன்கலூர் நாடு

                      விருத்தம்

8.















பொங்கலூர் கொடுவாயி செம்பை குன்றாபுரம்
                        புற்றிரைசை யுகாயனகரம்
     புகல்பொருந்தா புரி திருப்பையூருடனேற்
                     புகழ்பெரும் பிள்ளை நகரம்
தங்குமிச்சிக் காணி வானவன் சேரியொடு தளிகைநிறை
                                   யங்கிநகரம்
     சாரரவண நல்லூர்பல் லாபுரி குடிமங்கை
                      தகைமையுட னோதுதென்னா
மங்கலந் தென்பள்ளி லக்கர் பெற்றம்பள்ளி வாய்த்தநம
                                னாரியெழில்சேர்
     மண்ணறை முகுந்தநல் லூரமுக் கயங்கற்றை
                             மாலூற்றலூர் சிறந்த
புங்கமிகு காஞ்சிநதி லவணநதி யாண்கொல்லி
                          புராரிநதி மாமாங்குசூழ்
     பூர்வீக வலகுமலை யாண்டவன் அரசுபுரி
                             பொன்கலூர் நாடுதானே

பொன்கலூர் இச்சிக்காணி தென்னமங்கலம்
கொடுவாயி அலகுமலை தென்பள்ளி
செம்புத்தொழு தளிகை இலக்கம்பாடி
சொக்கம்பாளயம் அவிநாசிபாளயம் பெற்றம்பள்ளி
குன்றிடம் நிறையூர் நமனாரி
புற்றிரைச்சல் அங்கித்தொழு மண்ணறை
உகாயனூர் அரவணநல்லூர் நல்லூர்
பெருந்தொழு பல்லாக்கோயில் அமுக்கயம்
திருப்பூர் பொட்டிக்காம்பாளயம் கற்றாங்காணி
பெரும்பிள்ளையூர் குடிமங்கலம் ஊற்றுக்குழி.

                                           - ஆக ஊர்கள் - 27