பக்கம் எண் :

214

                  தென்பொங்கலூர் நாடு

                    நேரிசை வெண்பா

9,



*



கீரனூர் பொம்மனல்லூர் கேடில் பருத்தியூர்
நாரி பொன்னி பாடியொடு ராயகுளம் - வீரமிகத்
தங்குகூத் தம்பூண்டி தானாமா றூருந்தென்
பொன்கலூர் நாடாய்ப் புகல்

கீரனூர் பருத்தியூர் ராயகுளம்
பொம்மனல்லூர் பொன்னிபாடி கூத்தம்பூண்டி

                                              - ஆக ஊர்கள் 6

இதனை வையாபுரி நாட்டுக்கு அடைசல் (இணை) நாடு என்றுங் கூறுவர்.

                      ஆறைநாடு

10.















சேவைநக ரன்னியூர் வெள்ளாதி கோமங்கை திசை
                           புகழவாழ் முடுதுறை
     தென்கவசை துடியலூர் நீலநகர் பேரையொடு
                     தெக்கலூர் கரை மாதையும்
மேவுபுக ழவிநாசி கஞ்சை கானூர்கரவை வெண்பதியு
                               மிருகா லூரும்
     விரைசேரு முழலையொடு வடதிசையி லுறுகின்ற
                       வெள்ளையம்பாடி நகரும்
நாவலர்க் கினிதான திருமுருகு பூண்டியொடு
                      நலசெவளை பழனைநகரும்
     நம்பியூ ரோடெலத் தூருக்கிரம் புலவர் நகரமுட
                                னினிமையான
கோவினகர் தொண்டைமான் புத்தூரு முட்டமே கூடலூர்
                                   சிங்கநகருங்
     குடக்கோட்டூர் குள்ளந்து றைப்பதியு வாள்வந்தி
                      கோட்டைகரை யாறைநாடே.


1 இவ்விருத்தத்தைத் திருத்தமாக எழுதியனுப்பினவர் தமிழ்ப் பண்டிதர்
 ஸ்ரீமான் - குமாரசாமி பிள்ளையவர்கள்.