பக்கம் எண் :

216

     திரமான கோடிநகர் மங்கலம் வாகையொளிர்
                   சேர்நிகம மாவலூரும்
பாமேவு வாணிகுடி கொண்டிலகு மிரவலர்கள்
                         பகரவரி தாயபுத்தூர்
     பன்னுமறை யந்தணர்கள் வாழ்விற் செழித்திடும்
                      பழமைமிகு சிங்கநல்லூர்
மாமேவு செந்தாமரைப் பொய்கை யுங்காஞ்சி
                         மாநதிவயங்கு மேலாம்
     மாநிலம் புகழ்மந்திர கிரிமுருகர் வாசஞ்செய்
                           வாரக்க நாடுதானே.

தென்(செஞ்)சேரி சூரனூர் நிகமம்
களந்தை சாமாளாபுரம் ஆவலப்பூம்பட்டி
பல்லடம் புதுவை புத்தூர்
பூமலூர் வெள்ளலூர் சிங்காநல்லூர்
பேறை கோடிநகர்  
குயிரை மங்கலம்  

                                                                                                               - ஆகஊர்கள்- 16

                 வையாபுரிநாடு

                   விருத்தம்

13.















திருமிகும் பழனியூர் கோதைமங் கலமுடன்
                        செப்புகலையம் புதூரும்
     சேரமா னூரிறைய மங்கல மடத்தூரு திகழ்கடத்
                                 தூரினுடனே
அருமைமிகு கணியூர்கண் ணாடிப்புதூருடன்
                    அழகுமிகு கோட்டைத்துறை.
     ஆகுங்கொழுங் குண்டை மேல்கரைப் பட்டிலூ
                        ரமர்தேவாதா குடியுமே
பெருமைமிகு மாய்க்குடியி னோடமரர் பூண்டியும்
                            பிசகாமணிச்சிலம்பு
     பீடுறுங் கொழுமம்வாழ் கரையோடீ ரொன்பதூர்
                        பிறங்குபுக ழோங்குநாடு
முரிமையுட னிரவலர்கள் மனநிலைமை யாய்ந்துள்
                      ளுவந்துதவு கின்றசெங்கை
     உத்தமர்கள் மேவுதிரு வாவினன் குடியென்ன
                         வுயர்மிகு வளநாடரோ