பக்கம் எண் :

219

வீரமிகு சோழபாண் டியுநடுவ னேரியு மேவுசித்
                             தூருதேவூர்
     மிக்கபூ லாம்பட்டி பக்கநா டதிவலிமை
                மிஞ்சுறு பெரும்பாலையாம்
பேரிலகு மிருபத்தா றூரோடு மேன்மைமொழி
                பெற்றநதி களும்வரைகளும்
     பேசரிய சிற்பமமர் கோயிலுங் கட்டிபுகழ்
                   பெருகுபூ வாணியநாடே.

தாரமங்கலம் ஓமலூர் கொங்கணாபுரம்
கச்சுளி கருப்பூர் சோழபாண்டி
காடையாம்பேட்டை நங்கைவல்லி நடுவனேரி
வனவாசி வெள்ளாறு சித்தூர்
சின்னப்பன்பட்டி மேச்சேரி தேவூர்
தோப்பூர் முப்பை-சமுத்திரம் பூலாம்பட்டி
கோனேரிப்பட்டி அரசறாமணி பக்கநாடு
இடைப்பாடி அமரகுந்தி பெரும்பாலை.
துளசம்பட்டி சூரப்பள்ளி  

                                        - ஆக ஊர்கள் - 26

     பூவாணிய நாட்டின் வடக்கு எல்லையான பெரும்பாலையே
அதிகமானது இராஜமாநகரமான தடூர் (தருமபுரி) நாட்டுக்குத்
தென்எல்லை ஆம்.

                மற்றொருவகை

                   வெண்பா

18.



*



நங்கைவல்லி நாடு நணியபக்க நாடுடனே
தங்குபெரும் பாலையெனச் சார்நாடுந் - தங்குபுகழ்ப்
பூவா ணியநாடுட் பூத்தனவென் றோதினார்
பாவாண ருள்ளம் பரிந்து.

     பூவாணிய நாட்டினுள் நங்கைவல்லி நாடு (இதை வஞ்சிநாடு என
வழங்கினதுண்டு) பக்கநாடு - (இதை வெள்ளாறு நாடு என்பாருமுளர்)
பெரும்பாலைநாடு எனச்சில ஊர்கள் சேர்ந்ததாய்ச் சிறுசிறுநாடு ஆகப்
பிளவு கொண்டும் வழங்கப்பட்டுள்ளது.