பக்கம் எண் :

224

                   வாழவந்திநாடு

                     விருத்தம்

25.















வாகுசேர் தருவாழ வந்திகூ டற்சேரி வாய்த்தபுல்
                            லூர்மோ கனூர்
     மருவுகீ ரம்பூரு வல்லிபுர மதனோடு
                    மனத்திடத்தோ ளூரினும்
மேகமென நீடுசாத் தம்பூரு சொல்லுக்கு மேலான
                             திண்டமங்கை
     வித்தக நடந்தையும் ஆரியூர் கோதையூர்
                     மேலைசாத் தம்பூருடன்
ஆகமந் தெரிபிள்ளை கரையாறு கோதூரு மம்பிகை
                             மடப்பள்ளியும்
     அழகுறு பிராந்தகம் தளிகை செங்கைப்பள்ளி
                     யருண்மேலை யாரியூரும்
கோகநக முத்தாறு குடகனொடு காவிரி குலவு
                              சீரங்கமதுவும்
     கொங்குமண் டலமேவு நாலாறு நாட்டினிற்
                        குடவாளவந்தி நாடே.

வாழவந்தி சாத்தம்பூர் கோதூர்
கூடற்சேரி திண்டமங்கலம் மடப்பள்ளி
புல்லூர் நடந்தை பிராந்தகம்
மோகனூர் ஆரியூர் தளிகை
கீரம்பூர் கோதையூர் செங்கைப்பள்ளி
வல்லிபுரம் மேலைசாத்தம்பூர் மேலையாரியூர்
தோழூர் பிள்ளைகரை  

                                                                                                            ஆக ஊர்கள் - 20

         வாழவந்தி நாட்டுக்கு உபநாடுகள் (2)

                 1. தூசூர் நாடு

26.







மருவுலவு தூசியூர் குவளமா பட்டியுடன்
                  வளம்பெரிய தோகைநத்தம்
     வளர்சிதம் பரபட்டி முத்தக்கா பட்டியும்
                       வருபழய பாளயமுடன்
தருநிலவு வேப்பையும் வசந்தரா யன்கோயில்
                         தருலத்தி வாடிபரளி
     தாதுலவு பொன்னேரி புதுபட்டி புதுகோட்டை
                        தங்குமாலப் பட்டியும்