பக்கம் எண் :

227

                    வெங்கால நாடு

29.















*















காருற்ற புன்னம் பவுத்திரநா கம்பள்ளி
                     காளிக்கு றிச்சிகுப்பம்
     கமழ்தும்பி வாடியு நெடுங்கூர் கோயம்பள்ளி
                    காசிபாளயங் கோயிலூர்
சீருற்ற விகுருதநா யகர்வெஞ்ச மாக்கூடல் சீராம
                              புரமதோடு
     சேர்பள்ள பாளயம் வெள்கடா வரமுடன்
                  றிகழ்நிமிர்ந் தம்பட்டியும்
பேருற்ற வாற்றூரு முதலபதி னாறூர்கள்
                பெருமைபெற வேபொருந்தி
     பிணிமுகப் பீலியுங் கயமருப் பாரமும்
                    பிரசமுழு தாதுமலரும்
ஏருற்ற மறியலைச் செங்கையா லிருகரை
                  யெறிந்துவரு சிற்றாறுடன்
     இணையிலான் பொருனைநதி சூழவா
         னிலையோங்கு பின்பவெங் காலநாடே.

புன்னம் நெடுங்கூர் ராமபுரம்
பவுத்திரம் கோயம்பள்ளி பள்ளபாளயம்
நாகம்பள்ளி காசிப்பாளயம் வெங்கடாவரம்
காளிக்குறிச்சி கோயிலூர் நிமிர்ந்தம்பட்டி
குப்பம் வெஞ்சமாக்கூடல் ஆற்றூர்
தும்பிவாடி    

                                          - ஆக ஊர்கள் - 16

     இராஜமாநகரமாதலின் கரூரை ஊர்த்தொகையுட் சேர்த்து
எண்ணப்படவில்லை. வேங்கல நாடு என்பாரும் உண்டு. இது
தென்கொங்கு.

             வெங்கால நாட்டின் இணை நாடு

                   இடைபிச்சனாடு

                      வெண்பா

30.




*




பொன்னாரி யூர்நெடுங்கூர் போற்றுபர
                           முத்தியுடன்
முன்னூருஞ் சேர்நான்கு மூதூர்கள் - கன்னிச்
சடைப்பிச்ச னாடுந் தலமேவு கொங்கில்
இடைப்பிச்ச னாடென் றியம்பு.