பக்கம் எண் :

230

பட்டணம் நத்தமேடு துத்திக்குளம்
அத்தனூர் கல்லங்குளம் சேந்தமங்கலம்
மின்னாம்பள்ளி மின்னக்கல் தொப்பைபட்டி
மல்லூர் ஒடுவன்குறிச்சி நாமகிரிப்பேட்டை
வடகன்பட்டி சிங்களாந்தபுரம் கலியாணி

                                                                                                      - ஆக ஊர்கள் - 24

     இந்த இராசிபுர நாடு ஏழூர் நாடு முதலிய நாடுகள் சூழவுள்ள
கொல்லிமலையின் மேல் 14 நாடுகள்.

     வாளவந்தி நாடு, வலப்பூர் நாடு, குண்டூர் நாடு, தின்னனூர் நாடு,
அரியூர் நாடு, தேவனூர் நாடு, சேலூர் நாடு 7.

     குண்டுணி நாடு, ஆலத்தூர் நாடு, திருப்பள்ளி நாடு, இடைப்புல்லி
நாடு, சித்தூர் நாடு, பிறக்கரை நாடு, பயில நாடு 7.

     இவ்வூர்த் தொகையின் பாட்டு 25, 26 நோக்குக.

                       சேலம் நாடு

               இது ராசிபுர நாட்டின் உபநாடு

34.















*















வளமிகுந்திடு சேர ராயன்மலை நின்றுவரு
                        மணிமுத்து நதிசெழிக்கும்
     வண்மைசேர் சேலம்வெண் ணந்தூ ரமாப்பேட்டை
                 வளர்செவ்வாய்ப்பேட்டை மல்லூர்
தளமிகுங் குமரநக ரலைவாய் நடுப்பட்டி சௌதாரபுர
                                     மினக்கல்
     தணிவில்மிசி னாம்பட்டி குமரசா மிப்பட்டி
                        தாங்குசெம் மாண்டபட்டி
உளமகிழ நிமிரிளம் பள்ளிராக் கிப்பட்டி யொயிலான
                                    வீரபாண்டி
     ஓதறிஞர் சந்ததம் வந்துதமிழ் பாடிடு முத்தமச்
                                  சோழபுரமும்
அளவில்பய னுதவியின் புறுகாரி பட்டியு மாண்மை
                                 வீராணமுடனே
     யயோத்தியணி நகரமுஞ் சேரவரு மிருபதூ ரழகான
                                     சேலநாடே.

சேலம் நடுப்பட்டி ராக்கிப்பட்டி
வெண்ணந்தூர் சௌதாபுரம் ஓலைப்பட்டி வீரபாண்டி
அம்மாப்பேட்டை மின்னக்கல் உத்தமசோழபுரம்

                                                       -கரபுரம்