இச்சாசனத்தின் காலம் கி.பி. 1538 ஆகும். சாசனம் முழுக்க
இல்லாததால் இதில் வரும் கர்த்தர் தலைவர்கள் இன்னா ரென
அறிந்துகொள்ள இயலவில்லை. அக்காலம் 42 பிரிவுகள் இருந்ததை இது
உணர்த்துகின்றது. கொங்குமண்டல சதகங்களின் காலத்துக்கு முற்பட்ட
அண்ணன்மார் சுவாமி கதையிலும் 24 நாடுகளுக்குமேல் சில நாட்டின்
பெயர்கள் வருகின்றன. 'இராமபத்திரன் பட்டையம்' என்ற ஏட்டில்
சிற்றெழுந்தூர் நாடு, பூந்தை நாடு, மதிவள நாடு, நன்னாமதிவள நாடு,
பாரி ஒடுவெங்கல் நாடு, வண்டிக்கோட்டை நாடு, வடகரைப் பேரூர் நாடு
எனச்சில நாட்டுப் பிரிவுகள் வருகின்றன.

கொங்கு மண்டல சதகம் (வாலசுந்தரக் கவிஞர்) ஏட்டுப்பிரதி ஒன்றின்
இறுதியில் இருபத்தொன்பது வளநாட்டு விருத்தம் என ஒரு பாட்டுள்ளது.
அது.

திருமருவு புகழ் கொங்கில் மூவாறு கோட்டமும்
தென்திசையில் நாலாறெனும்
தென்கரை .... சை ஆரை தென் தலைசையும்
செயகாங்கை வேங்கை தட்டை
மருவுலவும் அண்டையில் குருவாவினன்குடி
வாரக்கை ஆனைமலையும்
மகிழ் சொற்க நல்லூர்க்கா பொங்கலூர் நரையனூர்
வடகன் டிடு வங்கமும்
அருள்பெருகு காஞ்சி குறுப்பு பூவானியும்
அன்புபெறு மிராசி புரமும்
அரையனாள் மண்ணாள் கிழங்கு வாளவந்தியும்
அதுகீழ்க் கரையில் நாலுநாடும்
குருபரவு முன்னூற் றெண்பது சிவாலயமும்
கொங்கேழு தேவர் சபையும்
கொல்லிமலை வெள்ளிமலை குழித்தலை தலைமலை
தழுவு கொங்கு நாடே

(பழைய சுவடியிலிருந்து)

எனவரும் இப்பாடல் மூவாறும், நாலாறும் கொண்ட 42 நாடுகளை
அல்லது கோட்டங்களை உணர்த்துகின்றது. தென்திசையில் நாலாறு
(24) என்று தாராபுரம் சூழ்ந்த நாடுகளை உணர்த்துமாறு அறிகின்றோம்.

கொங்கு மண்டல சதகத்தினால், கொங்கு நாட்டிலுள்ள மலைகள்,
ஆறுகள், புகழ்பெற்ற ஊர்கள், கோவில்கள், நாட்டின் சமயங்கள், சமயத்
தலைவர்கள், வேந்தர்கள், குறுநிலமன்னர்கள், பழக்க வழக்கங்கள், வீரம்,
கொடைப்பண்பு முதலிய அருங்குணங்கள்'