திலுள்ளவை 94 ; தனக்கே உரிய பாடல்கள் 30 ; ஆக 150 பாடல்கள் உள்ளன. கம்பநாதர் பெயர் நூலின் எந்த இடத்திலும் குறிக்கப்படவில்லை.
இரண்டாவது சதகத்தில், முதல் சதகத்தின் பாடல்கள் 6, இரண்டு மூன்றாவது சதகங்களுக்குப் பொதுவானவை 86; தனக்கே உரிய பாடல்கள் 9 - ஆக 101 பாடல்கள் உள்ளன. ஆராயும்போது மூன்று சதகங்களுக்கும் உரிய 300 பாடல்களில் இப்போது நமக்குக் கிடைத்துள்ளவை போக மேலும் 60 பாடல்களுக்குமேல் இன்னும் நமக்குக் கிடைத்தாக வேண்டும் என்பதே கருத்தாகும்.
மூன்றாவது சதகத்தில் பாடல் எண் 90 முதல் 147 வரை 58 பாடல்கள் குலவிளக்கப் பாடல்களாகும். பூசகுலம் - மணியகுலம் பரத குலம், கூரைகுலம், கனவாளகுலம், எண்ணகுலம், ஒழுக்கர்குலம், மேதிகுலம், வாரணவாசிகுலம் பற்றிய பாடல்கள் இந்நூலில் தான் இடம் பெற்றுள்ளன. இதனால் கம்பநாத சுவாமியவர்கள் பாடியநூல் ஒன்று உண்டு என்பதும், அவற்றுள் சிலவே இன்று நமக்குக் கிடைத்துள்ளன வென்பதும், மூன்று சதகங்களுக்குமாக இன்னும் பல பாடல்கள் வெளிவராமல் மறைந்துள்ளன வென்பதும் அறியலாகின்றது.
இப்போது மூன்றாம் சதகத்தில் உள்ள பாடல்களுள் மற்ற சதகங்களில் இல்லாத புதிய பாடல்கள் 30 மட்டும் இடம் பெறுகின்றன. மற்ற பாடல்கள் ஏற்கனவே வந்துள்ளவை. இப்பாடல்களில் ஒன்றிரண்டு நீங்கலாக மற்றவைகளுக்கேற்ற உரை விளக்கங்கள் கிடைக்கவில்லை. பாடல்களின் தொடர்பான குலத்துச் சான்றோர்வாய்க்கேட்டு உணர்தலே சிறந்ததாகும். காலப்போக்கில் விளக்கமாகலாம்.
கம்பநாத சுவாமியவர்கள் துறவியாக வாழ்ந்தவர் என்பதைப் பெயரிலிருந்தே அறிந்து கொள்ளலாம் இவர். 'மரபாள சூளாமணி' என வேறு ஒரு நூலையும் பாடியுள்ளார். அது 130 விருத்தங்களாலாகியது. அருண உற்பவம், வசிய உற்பவம், கோத்திர உற்பவம், ஆசார உற்பவம், வேத உற்பவம் எனும் பிரிவுகளையுடையது, இம்மரபாள சூளாமணியைப் பெரியண்ணப்புலவர் என்பவர் விளக்கவுரையோடு எழுதிய ஏடு ஒன்றும் நூலகத்தில் உள்ளது. இந்த நூலின் ஆசிரியர் திருவரங்கப் பெருமானை வணங்கிப்பாடியிருப்பதால் இவர் வைணவராக இருக்கலாம். இந்நூல் பாயிரம் 4 - ஆம் பாடலில்,
|