"இனியநற் கவிதையாளன் எதிர்த்திடும் புலவர் சிங்கம் தனைநிகர் ஒவ்வாக்கம்பன் தமிழ்க் கொடியாளன்தானே" |
என்று வரும் பாடலடிகளால் இவர் சிறந்த புலவர் என்பதை அறிகின்றோம்.
இதில் வெளியாகியுள்ள 30 பாடல்களும் புதியவையாக இப்போது வெளிவருகின்றன. இவை மறையாமல் காக்கப்பெற்றன. மேற்கொண்டு இவற்றை ஆராய்ந்து அறிதல் கற்றறிந்தோர் கடனாகும். இவற்றை வெளியிட்டதன் பயனாகப் பல புதிய வரலாறுகள் கிடைக்கக்கூடும் என்று எண்ணுகின்றோம்.
ஐ. இராமசாமி,
இக்கரை போளுவாம்பட்டி
|