கம்பநாத சாமியவர்கள்

அருளிச்செய்த

கொங்கு மண்டல சதகம்

(முடிசூட்டியது)

1



கொங்கேழ் நதியுஞ் சிவகிரி மேவு குவலயமுங்
கங்கா நதியும் புகழ்பெறு வாசமுங் கற்புநிலை
சிங்கா சனமுந் தசரதரா சன்றன் செல்வருக்கு
மங்காக் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே

(பி.ம்) 'நிதியும்' 'தசரதராமன்', 'முடிசூட்டுவார்'

(இந்திரனுக்கு அமுதளித்தது)

2



தேவா வமுர்தத் துருவாசர் சாபந் தேவேந்திரர்க்குப்
போபோ வெனவைந் தருங்கடற் புக்கலும் பொன்னுலகோர்
கோவா னிதியொடு கங்கை குலமுங் கொடுத்தழைத்து
வாவா வெனச்சொல்லி அமுதூட்டி வாழ்கொங்குமண்டலமே

(பி. ம்) 'வமுதத் துருவாசர்சாபந்', 'வமுதந்துருவாசர்', வைந்தருக்கடல்,

(விருந்து)

3



புரந்தர ராசன் செய்தேவா வமுர்தம் புனலொளிந்து
மிருங்கலி காலமக் காலத்தி லேயிவற் கேற்குமென்று
விருந்தை யளித்து நற்றேவா வமுர்தமும் விண்ணவர்கள்
வரம்பெறு நேர்கங்கை வங்கிசம் வாழ்கொங்கு மண்டலமே

(பி. ம்) 'தேவாவமுதம்,' 'புனலொழிந்து',

(நச்சுப் பொய்கை)

4



அர்ச்சுனன் தர்மன் சகாதேவன் வீம னகுலனைவர்
உச்சித கான வனந்தனி லோட வுயர்ந்த பொய்கை
நச்சது சேர வுயர்தர்ம ராசரு மரங்கமலை
வச்சுகி யார மனைவோரும் வாழ்கொங்கு மண்டலமே

(பி. ம்) 'அருச்சுனன் தன்மன்,' 'உச்சிதகானஞ் சுரந்தனில்',