பக்கம் எண் :

44

மல்லன்மா ஞாலத்து வாழ்பவரு ளெல்லாஞ்
செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார்
நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே
செல்வரைச் சென்றிரவா தார்.
                                    (நாலடி)

     இம்முத்தரையர் கொங்குநாடும் ஆண்டிருக்கிறார்கள் என்பதைத்
தமிழறியும் பெருமாள் கதை என்னும் புத்தகத்தில் - 'அங்காடி
கொள்ளப்போ யானை கண்டேனணி நகரமன்றியிலே சேனை கண்டேன்.
கொங்காளு முத்தரசர் தம்மைக் கண்டேன்' எனக் கூறப்பட்டுள்ளது காண்க.
கொங்கு நாட்டுள் அங்குமிங்குமாக அருகி வாழ்கின்ற வலையர் என்னும்
ஒரு வகுப்பினர்முத்தரசர் கூட்டத்தாரெனத் தங்களைப் புகழ்ந்து
கொள்கிறார்கள்.

                      கோசர்

40.



பனிமிகு நீள்கடல் சூழ்மே தினியிற் பலருமெச்ச
இனிமை தருந்தமிழ் மாது களிப்புற் றெலாவணியுங்
கனிவுறப் பூண்டு வளர்ந் தோங்கச் செய்யுங் கருத்தொடுநன்
மனமிகு கோசரும் வாழ்ந்தாண் டதுங்கொங்கு மண்டலமே

     (க-ரை) தமிழை ஆதரித்தவர்களும், நல்ல மனதுடையவர் களுமாகிய
கோசர்கள் ஆண்டது கொங்கு மண்டலம் என்பதாம்.

     வரலாறு : கோசர் என்பவர்கள் படைப்பயிற்சியிற் சிறந்தவராகிய
ஒரு மரபினர். இதனை "இளம்பல் கோசர் விளங்கு படை கன்மா
ரிகலினரெறிந்த வகவிலை முருக்கின், பெருமலைக் கம்பம் போலப்
பொருநற் குலையா நின்வலன்" (புறநானூறு) - மனத் தொடுபொருந்திய
மாறுபடாத சொல்லையுடையவர்கள் என்பது பொதியிற்றோன்றிய நாலூர்க்
கோசர் நன்மொழி போல வாயாகின்றது (குறுந்தொகை) என வருதல்
காண்க. இக்கோசர் கொங்கு நாட்டினை ஆண்டிருக்கிறார்கள் என்பதனைச்
"சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரையில்". "அது கேட்டுக் கொங்கிளங்
கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்திசெய்ய மழை
தொழிலென்றும் மாறாதாயிற்று" என்பதன் உரையிலே, "அங்ஙனஞ் செழியன்
நன்மை செய்து அவை நீங்குதலின் அதனைக்கேட்டு