|
(இ - ள்.) பூவாளி வேந்தன் தன்
பொன் ஆவம் பின்னே இட்டு - மலரம்புகளையுடைய
மன்மத வேந்தன் தன்னுடைய அழகுள்ள அம்பறாத்தூணியை
முதுகின்புறத்துக் கட்டித் தொங்கவிட்டு, ஏ வாளி
நாணின்மேல் இட்டு - அம்புகளை வில் நாணின் மேல்
முன்வைத்துத் தொடுத்து, இடம் கண்டு-ஏற்ற இடத்தைத்
தெரிந்துகொண்டு (அங்கு நின்றபடியே குறிபார்த்து),
வடம் கொள் வனமுலையாள் - முத்துமாலையைக்
கொண்டுள்ள அழகிய கொங்கைகளையுடைய
தமயந்தியின், வார்குழைமேல் ஓடும் - நீண்டுள்ள
காதுகளின்மேல் செல்லுகின்ற, நெடும் கடைகண்
பார்த்து நின்றான் - நீண்ட கடைக்கண்
பார்வையின் தன்மையை எதிர்நோக்கி நின்றான்.
(க - து.) மன்மதன், தன் வில்லை
ஆயத்தஞ் செய்து கொண்டு தமயந்தியின்
கடைக்கண்பார்வையை எதிர்பார்த்து நின்றான்
என்பதாம்.
(வி - ரை.) வடம் - மாலை.
சிறப்புப்பற்றி முத்துமாலை என்று பொருள்
கூறப்பட்டது.
‘ 1பிறைவடம் கிடந்து சுணங்குபூத்
தொளிரும்
பேரிள வனமுலை திளைப்ப’
என்றார், நைடதத்தினும். கண்கள்
நீட்சியால் காதளவும் வரை இருப்பது, நல்லிலக்கண
நங்கையர்க்கழ காதலின், ‘நெடுங்கண்கடை’
என்றார். கண்கடை என்பது, அதன் செயலாகிய
பார்வையைச் சுட்டுதலால் கருவியாகுபெயர்.
கடைக்கண், கண்கடை எனச் சொன்னிலை மாறிநின்ற
இலக்கணப் போலி.
மன்மதன் காதலர்க்குக் காதல்வெறியை
ஊட்டுதற்குத் தமயந்தியின் கட்பார்வை எவரிடம்
செல்கின்றதோ அவரிடத்தே தன் அம்புகளைச்
செலுத்த அம்பறாத்தூணியை முதுகிறிகட்டிக்கொண்டு,
அம்பை வில்லின் நாணில் தொடுத்துக் கொண்டு,
தன்தொழிலை மேற்கொண்டு துவங்கி நடத்துவதற்கு
ஆயத்தமாக நின்றான் என்பதாம். அஃதாவது
தமயந்தியின் குறிப்பின்படி தன் பணியை ஆற்றுதற்கு
முன்னின்றான் என்றபடியாம். பூவாளி - பூவாகிய அம்பு.
மன்மதனுக்கு மலர்களே அம்புகள். இதனை, ‘2ஆலைக்
கரும்புசிலை ஐங்கணைபூ நாண்சுரும்பு, மாலைக்
கிளிபுரவி மாருதம் தேர்’ எனவரும் ஆசிரியர்
செய்த இரத்தினச் சுருக்கச் செய்யுளானும் அறிக.
பூவாளி வேந்தனாயினும் இவள் தன் ஏவல்வழியே
நின்று பணியாற்றுகின்றான் என்னும் குறிப்பு
நயந்தோன்ற நின்றது. (132)
1. நைடதம், அன்னத்தைத்தூது : 1. 2.
இரத்தினச் சுருக்கம் :
|