பக்கம் எண் :

168நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

‘பேதைப்புள்’ என்பதற்கு அறியும் இயற்கையில்லாத தாய்ப்பறவை யென்றும் பொருள் கொள்ளலாம். தாலாட்டுதல்: குழந்தைகட்குத் தாய்மார் தம் இனிய குரலால் பாடி மகிழ்விக்கும் பாட்டு. இங்கும் தாய்மைப் பேறெய்திநின்ற நாரைகள், தம் குழந்தைகளாகிய குஞ்சுகள் அச்சம் நீங்கி உவப்புறத் தாலாட்டியதென்க. ‘தாலாட்டும் வள்ளைக் குருநாடர் மன்’ என்றதை உள்ளுறை உவமமாகக் கொண்டு குடிகட்டுத் தாய் போன்று பிறரால் அச்சமின்றிக் காக்கும் சிறந்த தண்ணளியுடைய மன்னன் என உரைத்தலுமாம். 1‘தாயொக்கும் அன்பில்’ என்றார் கம்பநாடரும், அரசன் சிறப்பைக் குறித்தற்கு. (138)

சேடி, தமயந்திக்கு மத்திரநாட்டு மன்னனைக் காட்டல்

146. தேமருதார்க் காளை இவன்கண்டாய் செம்மலர்மேல்
காமருசங் கீன்ற கதிர்முத்தைத் - தாமரைதன்
பத்திரத்தால் ஏற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்
மத்திரத்தார் கோமான் மகன்.

(இ - ள்.) தேமரு தார்க் காளை இவன் - தேன் தங்கிய மலர்மாலை யணிந்த இளைஞனாகிய இம்மன்னன், செம் மலர்மேல் - செந்தாமரை மலர்களின்மீது, காமரு சங்குஈன்ற கதிர்முத்தை - அழகிய சங்கினங்கள் பெற்ற ஒளி பொருந்திய முத்துக்களை, தாமரை தன் பத்திரத்தால் ஏற்கும் - தாமரைகள் (அவை காற்றால் அலைப்புண்டு நீரில் விழும்போது வீழாதவாறு தன்கைகளாகிய) இலைகளால் தாங்கிக்கொள்ளுகின்ற, படுகர் பழனம் சூழ் - பள்ளத்தாக்கான வயல்கள் சூழ்ந்தள்ள, மத்திரத்தார் கோமான் மகன் - மத்திரநாட்டு அரசன் மகனாகிய வேந்தன், கண்டாய் - அறிந்துகொள்வாயாக.

(க - து.) ‘(ஏ ! நாணின் பாவாய்!) இவ்வேந்தன், செந்தாமரை மலரில் சங்குகள் ஈன்ற வெண்முத்துக்களைத் தாங்கிக்கொள்ளுகின்ற இலைகளையுடைய தாமரை படர்ந்த மத்திரநாட்டார்க்கு அரசன் மகனாவான்’ என்பதாம்.

(வி - ரை.) தேன் மருவுதார், என்பது தேமருதார் என இடையிலுள்ள எழுத்துக்கள் குறைந்து நின்றன. காளை : உவம ஆகுபெயர். சங்குகள் தாமரை மலரில் ஈன்றுள்ள முத்துக்கள் காற்றால் அலைப்புண்டபோது அவைகள் கீழே வீழாவாறு இலைகள்

1. கம்பரா, அரசியல் : 4.