பக்கம் எண் :

மூலமும் உரையும்169

தாங்கிக்கொள்வ தென்பது, தாமரை, நீர்வளத்தானும் நிலவளத்தானும் செழிப்புறப் படர்ந்து நீரே தெரியாவாறு இலைகள் மூடிக் கிடத்தலால் என்க. நீரே தெரியாமல் இலைகளும் பூக்களும் செறிந்த தன்மையைப் 1‘புனல்யா றன்றிது பூம்புனல் யாறென’ என்றார் பிறரும். இதிலும் உள்ளுறை பொருளாக அவன் நாட்டு மக்கட்கு இடுக்கண் நேர்ந்த காலை இடுக்கணை நீக்கித் தாங்கிக் காக்கும் அறக்கருணையுள்ளான் என்பதை உணர்த்தி நின்றது.

காமரு - காமர் என்பது உகரச் சாரியைப் பெற்றது. முத்துக்கள் இருபது இடங்களில் பிறப்பதாகத் தொல்லோர் கண்டறிந்துணர்த்திய உண்மை. அவ்விருபது பொருள்களுள் சங்கும் ஒன்றாதலான், ‘சங்கீன்ற கதிர்முத்’ தென்றார். பத்திரம் - இலை. படுகர் - நீர் தேங்கிக்கிடக்கும் பள்ளங்கள். மத்திர நாட்டுக்குரிய மக்களை மத்திரத்தார் என்றார், ஊரிலுள்ள மக்களை ஊரார் என்பதுபோல. 2‘ஊரவர் கௌவை எருவாக’ என்ற இடத்தும் காண்க. கோமான் மகன் - தொன்றுதொட்டுவருகின்ற அவன்றன் குலப்பெருமையைச் சுட்டி நின்றது. மகன் - புதல்வன். அல்லது சிறந்தவன் என்று கோடலுமாம். மகன் என்பதற்குச் சிறந்தவன் என்னும் பொருள் தருதலை 3‘சோவின், அருமையழித்த மகன்’ என்னும் நான்மணிக் கடிகையாலும் உணர்க. (139)

சேடி, தமயந்திக்கு மச்ச நாட்டு மன்னனைக் காட்டல்

147. அஞ்சாயல் மானே இவன்கண்டாய் ஆலைவாய்
வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த - செஞ்சாலிப்
பச்சைத்தாள் மேதிக் கடைவாயிற் பாலொழுகும்
மச்சத்தார் கோமான் மகன்.

(இ - ள்.) அம் சாயல் மானே - அழகிய சாயலையுடைய மான் போல்வாளே, இவன் - இவ் வேந்தன், ஆலைவாய் வெம்சாறு பாய - ஆலைப் பொறியிடத்துப் பிழிந்தெடுத்த யாவராலும் விரும்பப்படும் கருப்பஞ்சாறு பாய்வதனால், விளைத்து எழுந்த செஞ்சாலி பச்சைத்தாள் - வளர்ந்து ஓங்கிய செந்நெற்பயிர்களின் பசிய நிறத் தண்டுகளினின்றும், மேதி கடைவாயின்பால் ஒழுகும் - எருமைகளின் கடைவாயில் நின்றும் பாலானது ஒழுகுகின்ற சிறப்புடைத்தான, மச்சத்தார் கோமான் மகன் - மச்ச

1. சிலப், 13 : 174. 2. திருக்குறள் : 1147.
3. நான்மணிக்கடிகை : 1.