|
நாட்டாருடைய வேந்தர் மகனாவான்,
கண்டாய் - அறிந்து கொள்வாயாக.
(க - து.) ‘ஏ அம்சாயல் மானே !
எருமைகளின் வாயினின்றும் பாலொழுகுமாறு
வளர்ந்துள்ள செஞ்சாலியின் தாள்களைக் கடித்துக்
குதட்டுகின்ற வளமிக்க மச்சநாட்டுக்கு மன்னன்
ஆவான்’ என்பதாம்.
(வி - ரை.) அம்சாயல் -
தோற்றத்தின் அழகு. அல்லது அழகிய மென்மை
எனலுமாம். மான் - மான்போன்ற மருட்சியையுடைய
தமயந்தியைக் குறித்தலால் உவமை ஆகுபெயர்.
வெம்மை - விருப்பம். கருப்பஞ்சாறே நீராகப்
பாய்ந்தோடி நெற்பயிர்களை வளர்க்கும்
என்பதனால் அந்நாட்டின் நிலவளனும் நீர்வளனும்
மிக்கதென்பது போதரும். கருப்பஞ்சாற்றின்
வளங்கொண்டு வளர்ந்த நெற்பயிர்களை எருமை
மாடுகள் கடிக்குங்கால் அதிலிருந்து பால் ஒழுகி
ஓடுகின்றதெனவே நெல்லின் செழுமையை
உணர்த்தியவாறாம்.
மச்சத்தார் - மச்ச நாட்டில் வாழும்
மக்கள். கோமான் - வேந்தன். வாய்க்கடை :
கடைவாயெனச் சொன்னிலைமாறிய இலக்கணப் போலி.
(140)
சேடி, தமயந்திக்க அவந்திநாட்டு
மன்னனைக் காட்டல்
148. வண்ணக் குவளை மலர்வௌவி வண்டெடுத்த
பண்ணிற் செவிவைத்தப் பைங்குவளை - உண்ணா
தருங்கடா நிற்கும் அவந்திநா டாளும்
இருங்கடா யானை இவன்.
(இ - ள்.) இவன் - இவ்வேந்தன், அரும்
கடா வண்ணக்குவளை மலர் வௌவி-அருமையாகிய எருமைக்
கடாக்கள் அழகிய குவளைமலர்களைப் பற்றிக்
கௌவி, வண்டு எடுத்த பண்ணில் செவி வைத்து -
அதிலுள்ள வண்டுகள் அப்போது பாடுகின்ற இசைப்
பாடலைக் காதுகொடுத்துக் கேட்டு, அப்பைங்குவளை
உண்ணாது நிற்கும்-அந்தப் பசிய குவளையை உண்ணாமல்
(அப்பண்ணிசைக்கு மயங்கி) நிற்கின்ற,அவந்தி நாடு
ஆளும் - அவந்தி நாட்டை ஆட்சி புரிகின்ற, இரும்கடா
யானை - பெரிய ஆண் யானையை ஒத்தவனாவான்;
(காண்பாயாக).
(க - து.) ‘பெண்ணருங்கலமே!
இவ்வேந்தன் குவளை மலரைக் கௌவி யெடுத்த ஆண்
எருமைகள் அதிலுள்ள
|