|
வண்டுகளின் பண்ணிசை கேட்டு
அம்மலர்களை உண்ணாது நிற்கும் வளமுடைய
அவந்திநாட்டு மன்னனாவான்’ என்பதாம்.
(வி - ரை.) வண்ணக்குவளை :
வண்ணத்தையுடைய குவளையென விரிதலால் உருபும் பயனும்
உடன்தொக்க தொகை. ஆண் எருமைகள் உண்ணுதற்குப்
பறித்தெடுத்த குவளை மலர்களில் தேனுண்ணத்
தங்கியிருந்த வண்டுகளின் பாட்டொலி கேட்டு
மயங்கி உண்ணாது நிற்கும் அவந்திநாடு என்பதனால்
அவந்நி நாட்டின் நீர்வளம் நிலவளம் செல்வவளம்
முதலியவற்றை விளக்கிக் கூறியவாறாம். எடுத்த :
பண் பாடுங்கால் உயர்த்துப் பாடுதலும் தாழ்த்திப்
பாடுதலும் சமனிலையிற் பாடுதலும் இசை பாடுவாரின்
இயல்பு. இதனை ஆரோகணம் அவரோகணம் சமம் என,
வடமொழியாளர் கூறுவர். எருமையின் வாய்க்குள்
அகப்பட்ட குவளைமலரை நெருக்குங்கால் அதிலிருந்த
வண்டுகள் மேல் இசை எடுத்துப் பாடத்
தொடங்கிற்றென்பதாம். ஐயறிவு கொண்ட எருமைகளே
அந்நாட்டில் இசைக்கு மயங்குமென்றதனால்
அந்நாட்டு மக்கள், கல்வி கேள்வி மிக்கார்
என்பதைக் குறிப்பால் குறித்தவாறாம். (141)
சேடி, தமயந்திக்குப் பாஞ்சால
மன்னனைக் காட்டல்
149. விடக்கதிர்வேல் காளை
இவன்கண்டாய் மீனின்
தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டில்-மடற்கழகின்
செந்தோடு பீறித்தேன் செந்நெற் பசுந்தோட்டில்
வந்தோடு பாஞ்சாலமர் மன்.
(இ - ள்.) விடக் கதிர்வேல் காளை
இவன் - நஞ்சு பொருந்திய ஒளியுடைய வேலேந்திய
காளைபோன்றவனாகிய இம் மன்னன், மீனின்
தொடக்கபோய் ஒழிய நிமிர்ந்த தூண்டில் - மீன்
பிடித்தற்கு மீன்பிடிப்போர் கோத்திருந்த
நாங்கூழ் முதலிய இரைகள் போய்விட்டதனால்
மேலோங்கிச் சென்ற தூண்டில் முட்கோல்,
மடல்கமுகின் செம்தோடு பீறி - மடலையுடைய கமுக
மரத்தின் வளமுள்ள மலர்இதழ்களைக் கிழிக்க,
தேன் - (அதிலிருந்து வழிந்த) தேனானது, செந்நெல்
பசும் தோட்டில் வந்து ஓடு - செந்நெறிபயிர்களின்
பசுந்தாளின் வழியாக வந்துவிழுந்து
கீழிறங்குகின்ற நீர்வளமிக்க, பாஞ்சாலர் மன் -
பாஞ்சால நாட்டு மக்கட்கு வேந்தனாவான், கண்டாய்
- அறிந்துகொள்வாயாக.
(க - து.) ‘வீமன்குல விளக்கே !
இவ்வேந்தன், தூண்டில் முள்ளில் மாட்டியிருந்த இரை
போதலால்,
|