1‘அள்ளற் பழனத் தரக்காம்பல்
வாயவிழ
வெள்ளம் தீப்பட்ட தெனவெரீஇப் - புள்ளினம்தாம்
கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும்
கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேற் கோக்கோதை நாடு’
என்னும் முத்தொள்ளாயிரச் செய்யுளும்
செவ்வல்லி மலர்கள் விரிந்த காட்சியை ‘வெள்ளம்
தீப்பட்டது’ என்று கூறியது, இதனோடு ஒப்பவைத்து
மகிழற்பாலதா யுள்ளமை காண்க. இவ்வாறே
கலிங்கத்துப் பரணியில் காடு பாடியது என்னும் பகுதிக்
கண்,
2‘செந்நெருப்பினைத் தகடு செய்துபார்
செய்த தொக்கும் அச் செந்தரைப்
பரப்பு
அந்நெ ருப்பினில் புகைதிரண்ட தொப்பு
அல்ல தொப்புறா அதனி டைப்புறா’
என்றதும் இக்கருத்தொடு முழுதும்
ஒத்திருத்தல் அறிக.
‘போரெனிற் புகலும் புனைகழல் மறவர்’
வழித்தோன்றலென விளக்குவாராய் ‘போர்
வேந்தர் கண்டறியாப் பொன்னாவம்
பின்னுடைய...வேந்தன்’ என்றார். அவன்றன் புறமுதுகு
காட்டிச் செல்லாத வீரத்தை விளக்கிய சிறப்பு
மாண்பாக அமைந்துள்ளமை காண்க. பொன் ஆவம் -
பொன்னால் தன் வெற்றிப் பெருமிதம் தோன்ற
அமைத்தணிந்த அம்புப்புட்டில். (144)
சேடி, தமயந்திக்கு அங்கநாட்டு அரசனைக்
காட்டல்
152. கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவளக்
கோடிடறித்
தேன்கழியில் வீழத்
திரைக்கரத்தால் - வான்கடல்வந்
தந்தோ எனவெடுக்கும் அங்கநா டாளுடையான்
செந்தேன் மொழியாயிச் சேய்.
(இ - ள்.) செம்தேன் மொழியாய் -
நல்ல தேன் போன்ற இனித்த சொல்லாளே ! இச்செய்
- இவ்வரசிளங்குமரன், கூன் சங்கின் பிள்ளை -
வளைவுள்ள சங்குகளின் குஞ்சுகள், பவளக் கொடி கோடு
இடறி -பவளக்கொடிக் கொம்பினால் தடுக்கப்
பெற்று மேலேறிச் செல்லவொண்ணாமல், தேன்
கழியில் வீழ - தேன் பாய்கின்ற
கழிக்கரையிடத்தே தவறி விழுங்கால், வான்
1. முத்தொள் : 1. 2. கலிங்கத்துப்பரணி:
82.
|