பக்கம் எண் :

176நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

கடல்வந்து - பெரிய கடல் நெருங்கி வந்து, திரைக்கரத்தால் அந்தோ என எடுக்கும் - அலைகளாகிய தன் கைகளினால் ஐயோ வென்று கதறி இரக்கங்கொண்டு தழுவிக் (கரையில்) எடுத்துவிடுகின்ற, அங்கநாடு ஆளுடையான் - அங்கநாட்டை ஆட்சி செலுத்துகின்ற மன்னனாவான்.

(க - து.) ‘தேனென இனிக்குஞ் செஞ்சொல்லாய்! இவ்வரசிளங்குமரன், கூன்சங்கின் இளங்குஞ்சுகள் நடந்து போங்கால் பவளக்கொடி தடுக்கித் தேன்கழியில் விழும் போது கடல் அந்தோ வென்று அலறித் தன் அலைக் கைகளினால் தழுவியெடுத்து விடுகின்ற நெய்தல் நிலஞ் சார்ந்த அங்கநாட்டை ஆளும் மன்னனாவான்’ என்பதாம்.

(வி - ரை.) கூன் சங்கு - வளைவான சங்கு. பிள்ளை - இளங்குஞ்சு. அவை குழந்தைப் பருவத்தினவாகலான், தவழ்ந்து செல்லுங்கால் சிறிது மேடான பகுதிகளில் ஏறமுடியாது வீழ்வது இயல்பு. அவைகட்குப் பவளக்கொடி மேடாக இருக்கின்றது. அதை ஏறிக் கடக்கமாட்டாமல் மலர்களிலிருந்து தேன் வடிந்து பாய்கின்ற உப்பங்கழிகளில் விழுந்துவிடுகின்றன. அதைக் கண்ட கடல், குழந்தைமேல் இரக்கங்கொண்டு, ‘ஐயோவென்று’ பதறி அலறிக்கொண்டு வந்து தன் அலைக்ளென்னும் கைகளினால் தாங்கியெடுத்துக் கரையேற்றிவிட்டுச் செல்கின்றது. அவ்வளவு சிறப்புமிக்க கடல் பக்கத்தே கொண்ட அங்கநாடென நாட்டின் சிறப்பைக் கூறினார். கடற்கரைகளில் சங்கு, நண்டு, அவைகளின் குஞ்சுகள் எங்கும் கடற்கரைகளில் சங்கு, நண்டு, அவைகளின் குஞ்சுகள் எங்கும் தவழ்ந்துகொண்டு செல்வது இயற்கை ; அவை பள்ளங்களில் விழுவதும் இயற்கை ; பவளக்கொடிகள் அடம்பங்கொடிகள் முதலியனவும் படர்ந்திருப்பதும் இயற்கை ; கடலின் அலைகள் ‘சோ’ வென்னும் ஒலியுடன் போவதும் வருவதும் தன்னுள் உள்ளே உள்ள பொருள்களை வெளியே கொணர்தலும் கரையிலுள்ள பொருள்களை உள்ளே கொண்டு செல்வதும் இயற்கை. இவ் இயற்கைக் காட்சிகளையெல்லாம் ஒன்றுபடுத்தித் தம் மனத்தகத் தமைத்து உருவக அணியும் தற்குறிப்பேற்ற அணியும் தந்து பிள்ளையைக் காத்திற்குவரும் தாய்மையுள்ளம்படைத்த ஒருவர்போல் அலறிக்கொண்டு வந்து தன் கைகளால் எடுத்து வெளியேற்றி விடுவதுபோல் கரையேற்றியதாகக் குறித்தார்.

கடல் அலைகள் இரைந்துகொண்டு வருதலைக் குழந்தைக்காக இரக்கங்கொண்டு அந்தோவென்று கூறுவதாகவும் அலைகளினால் அக்குஞ்சுகளை ஒதுக்கிக்கொண்டு செல்வது தன் கைகளால் அணைத்தெடுத்துக் காப்பாற்றி வெளிக்கொணர்ந்து விட்டதாகவும் அமைத்த தற்குறிப்பேற்ற அணி மகிழ்வும் இறும்