|
மீன்கள் வந்து கங்கைநீரில் மிதந்து
செல்கின்றன. அதுகாலைக் கங்கையில் வாழும்
கெண்டை மீன்கள் புதிதாக வந்த சுறா மீன்கள் மீது
உராய்கின்றன; அவ்வுராய்தலினால் உவர்நீர்த்
தன்மை படிந்த சுறாமீனின் உடலைத் தீண்டியபோது
அதற்கு ஒருவகை அருவருப்புணர்வு தோன்றுகின்றது.
அதனால் அது கங்கைநீரில் குளித்துச்
செல்கின்றதென இயற்கையாக நிகழும்
நிகழ்ச்சியைத் தற்குறிப் பேற்றமாக்கி
ஆசிரியர் கூறினார். எனவே, கேகயநாடு கடலொடு
கலக்கும் கங்கைநீர் வளனுடையதென அந்நாட்டின்
இயற்கை வளத்தைக் கூறியதாயிற்று.
ஆழி - கடல். சுறாமீன்களுக்குக் கண்கள்
செந்நிறமாக இருத்தலால், செங்கண் மகரமென
அடைகொடுத்துக் கூறினார். தெவ் - பகைமை. அதன்
தன்மையுடைய பகைவரை உணர்த்தலால் குணவாகுபெயர்.
கைவரை - தோள்களாகிய மலையென்று கொள்ளலுமாம்.
வேல் குளிக்க நிற்றல் - வேலைப் பாய்த்திக்
கொன்று போர்க்களத்தில் பெருமிதத்தோடு
நிற்றல். வேந்து - மன்னன். அஃறிணைபோல் நின்று
உயர்திணை உணர்த்திய சொல். அரசு அமைச்சு தூது
ஒற்று என்பன போல. குளித்தல் - நீரில் முழுகி
நீந்திச் செல்லுதல். (147)
சேடி, தமயந்திக்குக் காந்தாரநாட்டு
மன்னனைக் காட்டல்
155. மாநீர் நெடுங்கயத்து வள்ளிக் கொடிமீது
தானேகும் அன்னம் தனிக்கயிற்றில் - போம்நீள்
கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்
மழைக்கோதை மானேயிம் மன்.
(இ - ள்.) மழை கோதை மானே - மேகம்
போன்ற கருங்கூந்தலையுடைய மான்போல்வாய்,
இம்மன் - இவ்வேந்தன், மாநீர் நெடுங்கயத்து -
நீர்ப்பெருக்கமுள்ள நீண்ட தடாகத்திற்
படர்ந்துள்ள, வள்ளை கொடிமீது தான் ஏகும் அன்னம் -
வள்ளைக் கொடியின்மேல் ஏறித் தானாகத் (தனியே)
செல்கின்ற அன்னப் பறவையானது, தனி கயிற்றில்
போம் - (இருபக்கங்களினும் நாட்டிய மூங்கில்களிற்
கட்டியுள்ள) ஒற்றைக் கயிற்றில் (தள்ளாடிச்)
செல்கின்ற, கழைக் கோதையர் ஏய்க்கும் காந்தார
நாடன் - (மூங்கிலின்மேல் ஏறிவிளையாடுகின்ற)
கழைக் கூத்தியராகிய பெண்கள்போல்
தோன்றுகின்ற காந்தார நாட்டுக்கு மன்னனாவான்.
(க - து.) ‘ஏ மேகம் போன்ற
கூந்தலாய் ! தடாகத்தில் படர்ந்துள்ள
வள்ளைக்கொடியின்மேல் நடந்து செல்
|