|
கின்ற அன்னப்பறவையானது, கழைக்
கூத்தாடும் பெண்கள்போல் தோற்றமளிக்கின்ற
காந்தார நாட்டுக்கு வேந்தனாவன் இம்மன்னன்’
என்பதாம்.
(வி - ரை.) குளத்தின் நீரின்மேல்
வள்ளைக் கொடிகள் ஒன்றோடு ஒன்று
பின்னிக்கொண்டு கயிறுபோல் இருக்கின்றன.
அதன்மீது அன்னப்பறவைகள் நடந்து செல்கின்றன.
அக்காட்சி இருமருங்கும் மூங்கிலை நாட்டி அவைகளில்
கயிற்றைக் கட்டி அதன்மீது நடந்து கூத்தாடுகின்ற
கழைக்கூத்தாடிப் பெண்போல் தோன்றுகின்றது.
அன்னத்தைப் பெண்களுக்கு உவமமாகச் சொல்வது
மரபாகலான், அவை நடந்துசெல்வது இவ்வாறு
தோன்றுவதாகக் குறித்துக் காந்தார நாட்டின்
நீர்வளத்தைச் சுட்டிக் காட்டினார்.
இவ்வாறே சிந்தாமணி ஆசிரியரும்
வள்ளைக் கொடிகளின் மேல் வாளைமீன்கள்
ஏறிப்பாய்ந்து செல்வன, கழைக் கூத்தாடும்
பெண்கள் ஆடுவது போன்றும், நாரைகள் இருப்பன, அக்
கூத்தினைப் பாாப்போராகவும் குறித்துள்ளமையும்
இதனோடு ஒத்த கருத்தாகலான், அதனைத்
தருகின்றோம் :
1‘கூடினார்கள் அம்மலர்க் குவளையங்
குழியிடை
வாடுவள்ளை மேலெலாம் வாளையேறிப் பாய்வன
பாடுகால் கயிற்றிற்பாய்ந்து பல்கலன் ஒலிப்பப்போந்
தாடுகூத்தி ஆடல்போன்ற நாரைகாண்ப ஒத்தவே’
என்பதாம். பலாக்கனியைப் பறித்துத்
தலையிற் சுமந்துகொண்டு சென்று இருமருங்கினும் உள்ள
கமுக மரங்கள்மீது பற்றிப் படர்ந்திருக்கின்ற
முல்லைக்கொடிகளின்மேல் குரங்குகள் செல்கின்ற
காட்சியைக் கழைக்கூத்தாடுவோன் குடத்தைத்
தலையிற் சுமந்துகொண்டு ஆடிச்செல்லுங்
காட்சியாகக் குமரகுருபர அடிகள் குறித்திருப்பதும்
இக்கருத்தை ஒத்திருப்பது கண்டு மகிழ்க. அதனையும்
இதன்கீழ் வரைகின்றாம் :
‘2வானரம் ஒன்று ................................
பைந்துணர்க் கொடியில் படர்தரு தோற்றம்
..................................................
குடந்தலைக் கொண்டொரு கூன்கழைக் கூத்தன்
வடந்தனில் நடக்கும் வண்ணம் தேய்க்கும்’
என்பதும் காண்க.
1. சிந்தாமணி. 1. திருவாரூர்
நான்மணிமாலை : 41.
|