பக்கம் எண் :

மூலமும் உரையும்181

செடி, தமயந்திக்குச் சிந்துநாட்டு மன்னனைக் காட்டல்

156. அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்
பூச்சிந்து நாள்தேறல் பொன்விளைக்கும் தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன்.

(இ - ள்.) அம்கை - உள்ளங்கையையும், நெடுவேல்கண் ஆய் இழையாய் - நீண்ட வேற்படையையும் ஒத்த கண்களையுடைய ஆய்ந்தெடுத்த அணிகளையுடையாய், இம்மன் - இந்த வேந்தன், வாவியின்வாய் சங்கம் புடைபெயர - தடாகங்களிற் சங்குகள் தாமிருந்த இடத்தைவிட்டு நகர்ந்து செல்வதால், செந்தாமரைபூ கலங்கி சிந்தும் நாள்தேறல் - செந்தாமரை மலர்கள் அசைந்து சொட்டி வழிகின்ற புதுத் தேனானது, பொன்விளைக்கும் தண்பணைசூழ்-பொன்னிறமுள்ள நெற்பயிரை வளரச் செய்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த, மா சிந்து நாட்டான் - பெருமை பொருந்திய சிந்து நாட்டுக்கு வேந்தனாவன்.

(க - து.) ‘நீண்ட கண்ணினாய் ! இவ்வேந்தன், சங்குகள் நகர்ந்து செல்வதனால் தடாகங்களிலுள்ள செந்தாமரைமலர்த் தேன் சொட்டிவழிந்து பொன்போன்ற நெற்பயிர்களை வளர்க்கின்ற பெருமைமிக்க சிந்து நாட்டுக்கு மன்னனாவன்’ என்பதாம்.

(வி - ரை.) அம் + கை : அகங்கை என்பதன் திரிபு.

1‘அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்’

என்னும் நன்னூல் விதிப்படி புணர்ந்தது. உள்ளங்கையைப் போன்ற குவிந்த தன்மையும் வேலைப் போன்ற நீட்சி ! அகற்சி கூர்மை கொடுமை முதலியனவும் பொருந்திய கண். இவை கண்களுக்குக் கொடுத்த அடைமொழிகள்.

சங்கம் : சங்கு ; அம்முச்சாரியை பெற்றது. சங்குகளின் புடை பெயர்ச்சியினால் தடாகத்திலுள்ள செந்தாமரை மலர்கள் தேனைக் சொரிந்து அது நீருடன் கலந்து செந்நெற்பயிர்களை வளர்க்குமென்றமையான், நாடு நாடாவளத்ததாய் நீரும் தேனும் கலந்துசெல்லும் இடையறா நீர்வளனும் நிலவளனும் மிக்க நாடென நாட்டின் பெருமை கூறியவாறு. இவ்வாறே :

1. நன்னூல் : 222.