பக்கம் எண் :

182நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

1‘விழுந்த அஞ்சிறை வண்டினம் மிதிப்ப மெல்லரும்பு
கிழிந்து வார்தரு தேறலும் கிளர்சினைப் பலவின்
பழங்க னிந்தவீழ் தேறலும் பழனங்கள் தோறும்
வழிந்து பாய்தலின் வானுற வளர்வன செந்நெல்’

என்றார் நைடதத்தினும்.

பொன்போன்ற நிறமுடைய நெல்லைப் பொன்னென்று கூறினார். அது நெற்கு ஆய், அதனாலுண்டாகிய பயிருக்கு ஆதலால், இருமடியாகுபெயர். ‘சடைச் செந்நெல் பொன்விளைக்கும் தன்னாடு’ (98) என்றார் முன்னரும். நாள்+தேறல் - நாட்டேறல் எனப் புணர்ந்தது.

2‘னலமுன் றனவும் ணளமுன் டணவும்
ஆகும் தநக்கள் ஆயுங் காலே’

என்னும் நன்னூல் விதி காண்க. அன்றன்றுள்ள தேன் : புதுத்தேன் என்றமையால் தாமரை யென்றும் தேன்சொரிகின்ற வளமுள்ளதென அதன் செழிப்பையும் நீர்வளத்தையும் நிலவளத்தையும் சுட்டிற்று. பூச்சிந்து மாச்சிந்து என்பனவற்றின் எதுகைத் தொடைத் திரிபுநயம் காண்க. (149)

நளனுருவிற் போந்திருந்த தேவர்களை இன்னாரென அறியாது
தமயந்தி கலங்குதல்

157. காவலரைத் தன் சேடி காட்டக்கண் டீரிருவர்
தேவர் நளன்உருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணாநின்
றூசலா டுற்றாள் உளம்.

(இ - ள்.) பூவரைந்து மாசு இல்லாத பூங்குழலாள் - மலர்களை முடித்து அழகுடன் விளங்கும் பொலிவு பொருந்திய கூந்தலையுடைய தமயந்தியானவள், தன் சேடி காவலரைக் காட்டக் கண்டு - தன் தோழியானவள் (அங்கு வந்திருந்த) அரசர்கள் எல்லோரையும் (இவ்வாறு இன்னார் இன்னாரெனக் குறித்துக்) காட்டத் தெரிந்து, மற்று நளன் உருவா சென்று இருந்தார் - பின்னர் நளமன்னன் வடிவம்போல் அங்குப் போயிருந்தவராகிய, ஈர் இருவர் தேவர் அவரை காணாநின்று - இந்திரன் முதலிய தேவர்கள் நால்வரையும் இன்னின்னாரென அறியாமல், உளம்

1. நைடதம் : 9. 2. நன்னூல் : 237.