பக்கம் எண் :

மூலமும் உரையும்183

ஊசலாடுஉற்றாள் - தன்மனம் ஊசலாடுவதைப்போல் தடுமாற்ற மடைந்து நின்றாள்.

(க - து.) தமயந்தியானவள், தன் தோழி அங்கு வந்திருந்த அரசர்களை யெல்லாம் இன்னார் இன்னாரென்று காட்டத் தெரிந்துகொண்டு, பின்னர் அங்கு நளன் வடிவு கொண்டு வந்திருந்த இந்திரன் முதலிய தேவர்கள் நால்வரையும் இன்னின்னாரெனத் தெரியாமல் மனம் தடுமாறி நின்றாள் என்பதாம்.

(வி - ரை.) ‘ஈரிருவர் தேவர் நளனுருவாச் சென்றிருந்தார் ; மற்றவரைக் காணாநின்று உளம் ஊசலாடலுற்றாள்’ எனக் கொண்டு கூட்டிச் சொற்றொடராக்கிப் பொருள் கொள்க. ஊசலாடுதல் - ஊசல் ஆடும்போது போவதும் வருவதுமான இயற்கைத் தன்மை. அதுபோல் தமயந்தியின் மனம் அவர்களை நாடிப் பார்ப்பதும், பின்னர் இவர் யாரோ என மயங்கி வாளா நிற்பதும் பின்னர்ப் பார்த்தலுமாக இருந்தாள். ஊசலாடுவதை ‘1மையறு பிறவிபோல வருவது போவதாகி’ என்றார் கம்பநாடரும். மாசிலாப்பூங்குழலாள், குற்றமற்ற பொலிவினையுடைய கூந்தலுடையாள். கூந்தலுக்கு மாசின்மையாவது, காதலர் ஆசைபோல் இருளெனக் கறுத்து, அறலென நெளிந்து மின்னி இயற்கை மணங்கமழ விளங்குவது.

2 .............. பசுங்கொடி கரியமென் கூந்தல்
நானமும் புழுகும் கமழ்தர நீவி நள்ளிருள் குடியிருந் ததுவே’

என்றார், இத்தமயந்தி கூந்தலின் சிறப்பைக் கூறிய நைடத நூலாரும். (150)

தமயந்தி சுயம்வரத்துக்கத் தேவர்களும் வந்திருந்தார் எனல்

158. பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்
நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் - நீணிலத்து
மற்றேவர் வாராதார் வானவரும் வந்திருந்தார்
பொற்றேர் நளனுருவாய்ப் போந்து.

(இ - ள்.) பூணுக்க அழகு அளிக்கும் பொன் தொடியைக் கண்டக்கால் - (அழகுக்காகத் தானணிந்துள்ள) அணிகட்கும்

1. கம்ப. 2. நைடதம், அன்னத்தை தூது : 11.