முற்படும்போது, அச் செயல்
தகுதியற்றதென அவனுக்குத்தான் நடுநின்று உணர்த்துகின்றது. ஆயினும், தம் ஆசை தாம்
எடுத்துக் கொண்ட செயல்களில் முந்த, நன்றோ தீதோ அதைச்
செய்யவே முற்படுகின்றனர். இஃது உலகியல்.
கொலைஞன் மற்றொருவனைக் கொலை
செய்யமுற்படுகின்றபோது, அவன் மனச்சான்று நின்று
தடுத்துப் போராடியபின்தான் செய்கின்றான்.
இதனானே, திருவள்ளுவர் தாம் ஆக்கியருளிய
திருக்குறட் பெருநூலில் அறமுறைகளைக் கூறுங்கால் மனச்சான்றுக்கு
ஒவ்வச் செய்யவேண்டுமென்றே பல்லிடங்களில்
சுட்டிக்காட்டிக் கூறுவர். காட்டாக,
1‘தன்னெஞ் சறிவது பொய்யற்க
பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்’
என்றும்,
2‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்
பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்’
என்றும்,
2‘அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும்
எவனெஞ்சே
நீஎமக் காகா தது’
என்றும், பிறாண்டும் நெஞ்சையே
வற்புறுத்திக் காட்டிச் செல்வாராயினர்.
அதுபோன்றே அரசர்கள் மனநிலையே ‘நமக்குத்
தமயந்தி மணமாலை சூடாள் ; ஆயினும் போய்ப்
பார்ப்போம்’ என ஆசை முந்துறுத்தலால்
வந்தாராகலான், இவரும் ‘நாணுக்கு நெஞ்சுடைய
நல்வேந்தர்’ என்று குறித்தார் என்க. (151)
தமயந்தி தெய்வத்தை வேண்டுதல்
159. மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபிற் செம்மைசேர்
கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்
மன்னவனைத் தன்மனத்தே கொண்டு.
(இ - ள்.) சூழ்விதியின் மன்னவனை
தன் மனத்தே கொண்டு - (தமயந்தியானவள்) தன்னைத்
தொடர்ந்துள்ள ஊழின் வலியினால் நளவேந்தனைத்
தன்னினைவில் இருத்திக்கொண்டு, மின்னும்தார்
வீமன்தன் மெய்மரபில் - ஒளியெறிக்கின்ற
1, 2, 3. திருக்குறள் : 293, 271, 1291.
|