மாலையணிந்த வீமனுடைய அழிவில்லாத
குலத்தில் பிறந்த, கன்னி யான் ஆகில் - நான்
கற்பு முதலியவற்றில் சிறந்த கன்னிப் பெண்ணாக
இருப்பின், அன்னம் சொன்னவனை - என்பால்
அன்னத்தாற் சொல்லப்பெற்ற வேந்தனான நளனுக்கே,
கடிமாலை சூட்ட அருள் என்றாள் - மணமலர்மாலையை
நான் சூட்டும்படி (தெய்வமே) அருள்புரிவாயாக என்று
கூறினாள்.
(க - து.) தமயந்தியானவள், ‘நாள்
வீமன் குலத்தில் பிறந்த சிறந்த கன்னியாக
இருப்பேனானால், அன்னத்தாற் சொல்லப்பெற்ற
மன்னவனுக்கே மணமாலை சூட்டும்படியாகத் தெய்வமே,
எனக்கு அருள்புரிவாயாக’ என்று கூறினாள் என்பதாம்.
(வி - ரை.) மின்னுதல் - விளங்கித்
தோன்றுதல். மெய்ம் மரபு-பிறர் பழிதூற்றாது
நற்புகழோடு விளங்கும் குலம்; அஃதாவது,
பழிபாவங்களால் குலம் இடையறவு பட்டு அழியாது
வாழையடி வாழைபோல் வளர்ந்து வருங்குலம். சூழ்விதி
- சூழ்ந்த ஊழ். முக்கால வினைத்தொகை, ‘சூட்டஅருள்’
என்னும் வினையால் வினைமுதலாகிய ‘தெய்வம்’
என்ற சொல் வருவித்துரை கூறப்பட்டது. தமக்குத்
தோன்றாத ஒன்றை-செய்தற்கியலாத செயலை - ஒருவர்
தெரிந்துகொள்ளவோ செய்யவோ முற்படுங்கால், தம்
அறிவெல்லைக்கு மேற்பட்ட ஒன்றாகிய கடவுளரை
வேண்டிக் கோடல் உலகியல் ; ஆகலான், அம்முறையை
முற்கொண்ட தமயந்தியும் தன் முன்னர்த் தான்
அன்னத்தாற் கூறப்பட்டுக் காதலித்த நளமன்னன்
வடிவில் பலர் அச்சுவம்வர மண்டபத்தில்
இருத்தலால், யாரெனத் தெரிந்து மணமாலை சூட்ட
இயலாத நிலையில் திருவருளே துணையெனக் கொண்டு ‘அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருள்’ என இறைவனை வேண்டிக்
கொண்டாள் என்க. (152)
தமயந்தி, கண் இமைத்தல் முதலிய
செயல்களால் தேவரின்
வேறுபிரித்து நளனை அறிந்தாள் எனல்
160. கண்ணிமைத்த லாடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்றன்னை ஆங்கு.
(இ - ள்.) நறும் தாமரை விரும்பு
நல்நுதலே அன்னாள் - மணமுள்ள செந்தாமரை மலரை
விரும்பி அதிலிருக்கின்ற திரு
|